புன்னகை அரசி என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகை சினேகா. இவர் திருமணத்திற்கு பின் தொடர்ந்து படங்கள் நடிப்பதை நிறுத்திவிட்டார். சில கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் Goat திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தவிர்த்து வேறு எந்த திரைப்படத்திலும் அவர் தற்போது நடிக்கவில்லை.
மேலும் இவர் நடுவராக இருந்த டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியும் கடந்த வாரம் தான் முடிவடைந்தது. நடிகை சினேகா கடந்த 2014ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர் என்பதை நாம் அறிவோம்.
சினேகாவின் அம்மா, அப்பா
இந்த நிலையில், புன்னகை அரசி நடிகை சினேகா தனது அம்மா, அப்பாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இதுவரை ரசிகர்கள் பலரும் சினேகாவின் அம்மா, அப்பாவை பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. மேலும் இந்த புகைப்படத்தில் சினேகாவின் அக்காவும் இருக்கிறார்.