நடிகை ஜோதிகாவின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா,

85

 

தமிழ் சினிமாவில் திறமையான நடிகைகளில் ஒருவர் ஜோதிகா. முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், திருமணத்திற்கு பின் 6 ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பின் 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

தொடர்ந்து கதையின் நாயகியாக நடித்து வரும் ஜோதிகா தற்போது பாலிவுட் பக்கமும் கவனம் செலுத்தி வருகிறார் என்பதை நாம் அறிவோம். சமீபத்தில் இவர் நடிப்பில் சைத்தான் எனும் திரைப்படம் இந்தியில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் மலையாளத்தில் மம்மூட்டியுடன் இவர் இணைந்து நடித்திருந்த காதல் தி கோர் திரைப்படம் அமோக வரவேற்பினை பெற்றது. இந்த நிலையில், திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள நடிகர் ஜோதிகாவின் சொத்து மதிப்பு குறித்து தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

சொத்து மதிப்பு :
மக்கள் மனதில் இடம்பிடித்த நடிகை ஜோதிகாவின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 330 கோடி இருக்கும் என தகவல் கூறுகின்றனர். இதில் அவர் மும்பையில் வசித்து வரும் வீட்டின் மதிப்பு மட்டுமே ரூ. 70 கோடியாம். மேலும் சென்னையில் 20 ஆயிரம் சதுரடியில் இவருக்கு சொந்தமான கட்டிடம் ஒன்று உள்ளதாம். இதன் விலை ரூ. 100 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது.

SHARE