நடிகை நயன்தாராவின் அண்ணன் இவர் தான்.. புகைப்படத்துடன் இதோ

76

 

லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நயன்தாரா. இவர் கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பயணித்து வருகிறார். இதுவரை 75 படங்களுக்கும் மேல் நடித்துள்ள இவர் அடுத்ததாக டெஸ்ட், மண்ணாங்கட்டி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த அன்னபூரணி திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை நயன்தாராவிற்கு தேடி தரவில்லை. ஆகையால் அடுத்து வெளிவரும் திரைப்படத்தின் மீது அதிக நம்பிக்கையை வைத்துள்ளாராம்.

நயன்தாராவின் அண்ணன்
நடிகை நயன்தாராவின் தாய் மற்றும் தந்தையை நாம் பார்த்திருக்கிறோம். அவர்களுடன் நயன்தாரா எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது. ஆனால், நடிகை நயன்தாரா தனது அண்ணனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதுவரை வெளிவந்ததே இல்லை.

இந்நிலையில், முதல் முறையாக நயன்தாரா தனது அண்ணனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் நயன்தாராவின் கணவரும் பிரபல இயக்குனருமான விக்னேஷ் சிவனும் இருக்கிறார்.

SHARE