நடிகை பூஜா ஹெக்டேவின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா! முழு விவரம்

101

 

தமிழில் மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளிவந்த முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இப்படத்தின் தோல்விக்கு பின் தமிழ் சினிமா பக்கமாவே திரும்பி பார்க்காத பூஜா, தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடிக்க துவங்கினார்.

சில ஆண்டுகளிலேயே பல லட்சம் ரசிகர்களின் மனதை கவர்ந்த பூஜா ஹெக்டே முன்னணி நடிகையாக உயர்ந்தார். இதன்பின் நீண்ட நாட்கள் கழித்து தமிழ் சினிமா பக்கம் வந்த பூஜா, விஜய்யுடன் இணைந்து பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

மேலும் தற்போது பாலிவுட்டில் பிசியாக இருக்கும் பூஜா, ‘தேவா’ எனும் திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், இந்தியளவில் கனவு கன்னியாக ரசிகர்கள் மத்தியில் வலம் வரும் பூஜா ஹெக்டேவின் முழு சொத்து மதிப்பு குறித்து தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

சொத்து மதிப்பு :
சினிமா மூலம் நடிகை பூஜா ஹெக்டே சேர்த்து வைத்துள்ள மொத்த சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 50 கோடி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ரூ. 4 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறராம்.

இளைஞர்களின் மனதை கொள்ளைகொண்ட நாயகி பூஜா ஹெக்டே விளம்பரங்களில் நடிக்க ரூ. 40 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் சம்பளம் சம்பளம் வாங்கி வருகிறார் என கூறப்படுகிறது.

நடிகை பூஜா ஹெக்டேவிற்கு சொந்தமாக மூன்று சொகுசு கார்கள் உள்ளனர். Porsche Cayenne ரூ.2 கோடி , Jaguar ரூ. 60 லட்சம் மற்றும் Audi Q7 ரூ. 80 லட்சம். மேலும் மும்பையில் சமீபத்தில் 3BHK வீடு ஒன்றை வாங்கியுள்ளார் பூஜா. இந்த வீட்டின் விலை ரூ. 6 கோடி என தெரிவிக்கின்றனர்.

SHARE