நேஷனல் கர்ஷ் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடத்தில் நடிகையாக அறிமுகமானார். இதன்பின் தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்து தென்னிந்திய ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தனர்.
இதை தொடர்ந்து தமிழில் அவ்வப்போது தலைகாட்டி வரும் ராஷ்மிகா மந்தனா, தெலுங்கில் முழு வீச்சில் மூன்று படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதில் ஒன்று தான் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 தி ரூல். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படமும் இதுவும் ஒன்றாகும்.
ராஷ்மிகா மந்தனாவின் குடும்பம்
நடிகை ராஷ்மிகா மந்தனா கர்நாடகாவில் உள்ள விராஜ்பேட் ஊரில் 1996ஆம் ஆண்டு மதன் மந்தனா – சுமன் மந்தனா தம்பிக்கு பிறந்தார். இவருக்கு ஒரு தங்கையும் இருக்கிறார். சினிமாவில் பிசியாக நடித்து கொண்டிருந்தாலும், தனது குடும்பத்திற்காகவும் நேரங்கள் ஒதுக்கி மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் ராஷ்மிகா.
இந்நிலையில், தனது அப்பா, அம்மா மற்றும் தங்கையுடன் நடிகை ராஷ்மிகா மந்தனா எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. நேஷனல் க்ரஷ் நடிகை ராஷ்மிகாவின் குடும்ப புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.