தனது 13 வயதிலேயே சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு பெற்று நடித்து வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த்.
2016ம் ஆண்டு யாஷிகா நடிப்பில் கவலை வேண்டாம் என்ற முதல் திரைப்படம் வெளியாகி இருந்தது, ஆனால் படம் அந்த அளவுக்கு இவருக்கு பெயர் வாங்கிக் கொடுக்கவில்லை.
பின் அடுத்து துருவங்கள் பதினாறு, பாடம், இருட்டு அறையில் முரட்டு குத்து, மணியார் குடும்பம், கழுகு 2, ஜாம்பி, மூக்குத்தி அம்மன், தி லெஜண்ட் என தொடர்ந்து பல படங்கள் நடித்தார்.
இடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட யாஷிகா சரியாக விளையாடவும் இல்லை, மக்களால் கொண்டாடப்படவும் இல்லை. அதில் இருந்து வெளியேறியவர் பெரிய விபத்தில் சிக்க பிரச்சனைகளை சந்தித்தார்.
புதிய தொழில்
நடிப்பு, போட்டோ ஷுட் என பிஸியாக இருக்கும் யாஷிகா இப்போது புதிய தொழிலில் களமிறங்கியுள்ளார். அதாவது யாஷிகா தற்போது தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார்.
இவர் தயாரிக்கும் முதல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை வெளியாக உள்ளதாகவும் அதனை நடிகர் எஸ்.ஜே.சூர்யா வெளியிட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.