நடுவானில் பயணி ரகளை: மீண்டும் ஹாங்காங் திரும்பிய லண்டன் விமானம்

454
ஹாங்காங்கிலிருந்து இன்று காலை விஎஸ்201 என்ற வர்ஜின் அட்லாண்டிக் பயணிகள் விமானம் ஒன்று லண்டனில் உள்ள ஹீத்ரூ விமான நிலையத்தை நோக்கி தனது பயணத்தைத் தொடங்கியது.

விமானம் பறக்கத் தொடங்கி ஒரு மணி நேரம் சென்ற நிலையில் ராபர்ட் என்ற 26 வயதுப் பயணி ஒருவர் தனது கட்டுப்பாட்டினை இழந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். விமான ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார். வேறு எதுவும் செய்யமுடியாத நிலையில் விமானி மீண்டும் ஹாங்காங்கிற்கே விமானத்தைத் திருப்பியுள்ளார்.

விமானம் ஹாங்காங்கில் தரையிறங்கிய பின்னர் விமானிகள் போக்குவரத்து பாதுகாப்பு சட்டத்தை மீறியதற்காக அந்தப் பயணியைக் கைது செய்த அதிகாரிகள், அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மற்ற பயணிகள் அனைவருக்கும் அங்கு தங்க வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு, பின்னர் தாமதமாக தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.

SHARE