நடை பயிற்சியின் போது நாய் கவ்விப்பிடித்த லொட்டரி சீட்டு அடித்த அதிர்ஷ்டம்!

71

 

சீனாவில் நடை பயிற்சிக்கு சென்றபோது உடன் அழைத்துச்செல்லப்பட்ட நாய், கவ்விப்பிடித்த லொட்டரி சீட்டுக்கு பரிசாக விழுந்த சம்பவம் பெரும் அச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு சீனாவின் குவாங்டாங் நகரில், நடை பயிற்சிக்கு லின் என்ற பெண் சென்று கொண்டிருந்தார். அவர் கையில் பிடித்திருந்த நாய், ஒரு கடைக்கு அருகே வந்தபோது திடீரென எஜமானரின் பிடியில் இருந்து நழுவி கடைக்குள் ஓடியது.

அங்கு வைக்கப்பட்டிருந்த லொட்டரி சிட்டு ஒன்றை கவ்விப்பிடித்தது. இதையடுத்து அவர் அதை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இறுதியில் அந்த சுரண்டல் லொட்டரிக்கு 139 டொலர் பரிசு விழுந்திருந்தது. இதனால் லின் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

இதனால் அடுத்த நாள் அவராகவே தனது நாயை மீண்டும் கடைக்கு அழைத்துச்சென்று ஒரு லொட்டரியை கவ்வச்செய்தார்.

இந்த முறை அவருக்கு 4 டொலர் பரிசு விழுந்தது. அதிர்ஷ்டத்தை தேடித்தந்த நாய்க்கு பரிசுத்தொகையில் ஒரு பகுதிக்கு உணவு வாங்கிக் கொடுத்ததாக லின் கூறியுள்ளார்.

SHARE