நட்சத்திரத்தை கருந்துளை விழுங்குமா? நாசா கைப்பற்றிய நம்பமுடியாத ஆதாரம்

244

அண்டவெளியில், கருந்துளை முன்தோன்றிய ஒரு நட்சத்திரம் கருந்துளையால் முழுதாக விழுங்கப்பட்ட காட்சியை நாசா இப்போது படம்பிடித்துள்ளது.

பால்வீதியில் கருந்துளைப் பற்றிய புதிர்களை ஆராய்ந்து கண்டுபிடித்து அவ்வப்போது சுவாரஸ்யமான தகவல்களை நாசா உலகிற்கு அளித்து வருவது நாம் அறிந்ததே.

அதுபோல ஒரு அதிசயம் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு நட்சத்திரம் கருந்துளைக்கு நெருக்கமாக செல்கிறது. அப்போது அது ஒரு பயங்கரமான விதியை சந்திக்கிறது. கருந்துளையின் வாய் விரிகிறது இறுதியில் நட்சத்திரத்தை அது விழுங்கிவிடுகிறது.

இந்த மாபெரும் வன்முறை நிகழ்வை “நட்சத்திர ஏற்ற இறக்க இடையூறு” (Stellar tidal Disruption’) என்று அழைக்கின்றனர். நாசாவின் கூற்றுப்படி இந்த நிகழ்வு ஏற்படும்போது, எரிதலும் பெரும் வெப்பமும் ஏற்படுகிறது. கணக்கிட முடியாத உயர் ஆற்றல் கதிர்வீச்சு உருவாகிறது.

இதற்குமுன் விண்வெளி ஆய்வில் நட்சத்திரத்தை கருந்துளை விழுங்கியதற்கான பதிவுகள் இல்லை. கருந்துளையில் நட்சத்திரம் விழுங்கப்படுவதை பிடிப்பது மிகக்கடினம். காரணம் கருந்துளையை சுற்றியுள்ள ஏற்ற இறக்க இடையூறுகளை பற்றி முன்பு அறிந்திருக்கவில்லை.

கருந்துளையின் வாய் பரப்பை சுற்றியுள்ள தூசுகள் அதனால், உறிஞ்சப்படும்போது, அதனால், ஏற்படும் ஏற்ற இறக்க இடையூறுகளால் எரிதலும் வெப்பமும் பிரதிபலிக்கப்படுவதை நாசா ஆராய்ச்சியாளர்கள் குழு எதிரொலியோடு படம்பிடித்துள்ளது.

“பல ஏற்ற இறக்க இடையூறு நிகழ்வுகளில் இருந்து, அகச்சிவப்பு ஒளி எதிரொலிகளை முதல்முறையாக மிகத்தெளிவாக பார்க்க முடிந்துள்ளது” என எழுத்தாளர் ஸ்ஜோயர் வேன் வெல்ஸன் கூறியுள்ளார். இந்த படத்தை பார்க்கும்போது நமக்கும் அது தெரிகிறது.

அலை இடையூறுகளால் ஏற்பட்ட உயர் வெப்ப கதிர்வீச்சு கருந்துளையின் அருகில் உள்ள தூசு மண்டலத்தை எரித்து அழிக்கிறது. ஆனால், கருந்துளையின் மையத்துக்கு வெகுதூரத்தில் உள்ள துசு மண்டலத்தை வெப்பத்தின் தீவிரம் குறைந்துவிடுவதால் உஷ்ணமாக்குகிறது. ஆனால் அழிக்க முடிவதில்லை.

Nasa

அப்படி கருந்துளைக்கு வெளியில் உள்ள தூசுகள் அழியாமல் வெப்பமடைவதால் அவை உமிழும் அகச்சிவப்பு கதிர்கள் தொலைநோக்கியில் பிடிக்கப்பட்டுள்ளன.

ஏற்ற இறக்க இடையூறு நிகழ்வுகளில் வெப்ப ஆற்றல் மற்றும் கதிர்வீச்சு எவ்வளவு உருவாகிறது என்பதை விண்வெளி ஆய்வாளர்கள் அறிந்துகொள்ள ஒரு ஆதாரமாக இது பயன்படும்.

“இந்த ஆய்வு அண்டவெளியில் தூசுகள் இருப்பதை உறுதிசெய்கிறது. நட்சத்திர ஏற்ற இறக்க இடையூறு நிகழ்வில் அதிக அளவிலான ஆற்றல் உருவாகிறது போன்ற, அரிய உண்மைகளை நமக்கு கொடுத்துள்ளது” என இணை ஆசிரியரான வரோஜன் கோர்ஜியன் கூறுகிறார்.

மேலும், விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் ஏற்ற இறக்க தடைகளை புரிந்துகொள்வதோடு, நட்சத்திரங்கள் கருந்துளைக்கு அருகில் வந்தால் என்ன நடக்கும் என்பதும் இப்போது தெளிவாகியுள்ளது.

எண்ணற்ற கருந்துளைகள் உள்ளன. அவைகளை மையப்படுத்தியே அண்டவெளியில் தொகுதிகள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE