நண்டு – 1/2 கிலோ,
வெங்காயம் – 100 கிராம்,
தக்காளி – 100 கிராம்,
இஞ்சி, பூண்டு விழுது – 50 கிராம்,
தேங்காய் விழுது – 100 கிராம்,
பச்சை மிளகாய் – 6,
கறிவேப்பிலை – 1 கொத்து,
மஞ்சள் தூள் – 5 கிராம்,
மிளகாய்த்தூள் – 10 கிராம்,
மிளகுத்தூள் – 5 கிராம்,
சீரகத்தூள் – 5 கிராம்,
புளி தண்ணீர் – 50 மிலி,
எண்ணெய் – 150 மிலி,
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவைக்கு.
செய்முறை
நண்டை நன்றாக சுத்தம் செய்து இரண்டு துண்டாக வெட்டிக்கொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தேங்காய் விழுது, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் அனைத்தையும் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
ப.மிளகாயை இரண்டாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போனவுடன் தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்க வேண்டும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பிறகு அதில் நண்டு, சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து வேகவைக்கவும்.
நண்டு வெந்தவுடன் சிறிதளவு புளித்தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்தவுடன் கொத்தமல்லித்தழை சேர்த்து அலங்கரித்து இறக்கவும்.
சூப்பரான நண்டு குழம்பு ரெடி.