நண்பர்களுக்காக காரை விற்ற முத்து, அடுத்து எடுத்த அதிரடி முடிவு- சிறகடிக்க ஆசை அடுத்த அப்டேட்

70

 

விஜய் தொலைக்காட்சியின் டிஆர்பியை கீழே விழ விடாமல் பிடித்துக்கொண்டிருப்பது சிறகடிக்க ஆசை தொடர் தான். மற்ற தொடர்கள் எல்லாம் டாப் 5 சீரியல்களுக்கு கீழே தான் உள்ளது.

இந்த தொடரில் அடுத்தடுத்து விறுவிறுப்பான கதைக்களம், செட்டிமென்ட் காட்சிகள், அதிரடி திருப்பங்கள் என ஓடிக் கொண்டிருக்கிறது. இப்போது கதையில் சத்யா செய்த தவறை தனது மனைவி மீனாவிடம் கூற சொல்லாமல் பழியை ஏற்றுக்கொண்டு முத்து இருக்கிறார்.

இன்னொரு பக்கம் சிட்டி முத்துவை பழிவாங்க அவரது நண்பர்கள் காரை எடுக்க வருகிறார். அந்த நேரத்தில் முத்து தனது காரை விற்று நண்பர்கள் வாங்கிய கடனை அடைத்து காப்பாற்றுகிறார்.

அடுத்த கதைக்களம்
கார் இல்லாமல் இருக்கும் முத்து அடுத்து வேலை செய்ய கிளம்பிவிட்டார். அதாவது வண்டி ஓட்டும் வேலை மட்டுமே தெரிந்த முத்து இப்போது ஆட்டோ ஓட்ட தொடங்கியுள்ளார்.

இன்றைய கதைக்களத்தில் முத்து ஆட்டோ ஓட்டும் காட்சி வருகிறது, அதோடு மீனாவின் அப்பா நினைவுநாள் வருவதாக அவரது அம்மா வீட்டிற்கு வந்து அண்ணாமலையிடம் கூறுகிறார்.

SHARE