நதியாவை மிரட்டிய பிரபல நடிகர்.. முத்தம் கொடுப்பேன் என ஷூட்டிங்கில் மிரட்டல்

100

 

நடிகை நதியா தற்போதைய இளம் தலைமுறையினருக்கு அம்மா ரோலில் நடிக்கும் நடிகையாக தான் தெரியும். எம் குமரன் சன் ஆஃப் மகாலக்ஷ்மி உள்ளிட்ட பல்வேறு படங்களில், குறிப்பாக தற்போது தெலுங்கு படங்களில், அம்மா ரோல்களில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அவர்.

நதியா 80களில் இருந்தே சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அவர் மலையாள சினிமாவிலும் ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார். பிரபல மலையாள நடிகர் முகேஷ் உடன் ஒரு படத்தில் நடித்த போது நதியாவை தினமும் ஜோக் சொல்லி சிரிக்க வைப்பாராம் அவர்.

முத்தம் கொடுப்பேன்..
ஒரு நாள் முகேஷ் அப்படி ஒரு ஜோக் சொன்னபோது அவரை ஜோக்கர் என சொல்லி பாராட்டினாராம். அதை கேட்ட படக்குழுவினர் அதன் பின் முகேஷை ஜோக்கர் என சொல்லி பலரும் கலாய்த்து இருக்கின்றனர்.

நதியா இனிமேல் தன்னை ஜோக்கர் என சொன்னால் முத்தம் கொடுப்பேன் என அவர் மிரட்டினாராம். அதனால் அவரை எப்போது பார்த்தாலும் உதட்டை கைகளால் மூடிக்கொண்டு செல்வரார் நதியா.

இந்த தகவலை தற்போது ஒரு நிகழ்ச்சியில் அவர்கள் கூறி இருக்கின்றனர்.

SHARE