நயன்தாராவின் நிச்சயதார்த்தம், திருமணம் எப்பொழுது?

148

நடிகை நயன்தாரா எப்போதும் பிசியாக இருக்கும் ஹீரோயின். அந்தளவிற்கு கையில் படங்களை வைத்திருக்கிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் விஸ்வாசம், பின் ஐரா என படங்கள் வெளியானது. அடுத்தடுத்து படங்கள் ரிலீஸ்க்காக காத்திருக்கிறது. அதே வேளையில் அவர் தற்போது அட்லீ இயக்கத்தில் விஜய் 63 படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் நீண்டநாளாக காதலும் ஓடிக்கொண்டிருக்கிறது. நயன்தாராவுக்கு வயது 34 ஆகிவிட்டது. அவருக்கு திருமணம் செய்துவைக்க வீட்டில் ஆர்வத்துடன் ஏற்பாடு செய்து வருகிறார்களாம்.

விக்னேஷ் சிவனும் நயன்தாராவுக்காக காத்திருக்கிறார். அண்மையில் இவர்கள் விரைவில் நிச்சயதார்த்தம் செய்ய இருக்கிறார்கள் என தகவல் வந்தது. தற்போது வரும் நவம்பர் மாதத்தில் நிச்சயத்தார்த்தமும், அடுத்த ஆண்டு ஜனவரியில் திருமணமும் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE