காலஞ்சென்ற ராஜகீய பண்டித, திரிப்பீடக வல்லுனர் சங்கைக்குரிய நரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன நேற்று முற்பகல் இறுதியஞ்சலி செலுத்தினார்.
பாணந்துரை, கங்குல சிறி பரம விசுத்தாராமய மற்றும் மொறட்டுவை, எகொடஉயன ஸ்ரீ ஜிதேந்திர சைத்தியாராமய ஆகிய விகாரைகளில் வசித்து வந்த புத்தரக்கித தேரர், திரிப்பீடகத்தை தேசிய மரபுரிமையாக்குவதற்கு ஊன்றுகோலாக இருந்ததுடன், திரிப்பீடக மொழிபெயர்ப்பு குழுவின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
சிறப்பான பல தர்ம நூல்களை தேசத்துக்கு உரித்தாக்கிய அன்னார், இலக்கிய கீர்த்தி, ஸ்ரீ சத்தர்ம வாகீஸ்வர ஆகிய கௌரவ பட்டங்கள் கொண்டு போற்றப்பட்டதுடன், கோட்டே கல்யாணி சாமாஸ்ரீ சங்க சபையின் பிரதான பதவியையும் வகித்துள்ளார்.
அன்னாரின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மொறட்டுவை, எகொடஉயன ஸ்ரீ ஜிதேந்திர சைத்யாராமயவிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்கள், பூதவுடலுக்கு இறுதியஞ்சலி செலுத்தியதுடன், விகாரையின் பிக்கு சீடர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தார்.
ராஜகீய பண்டிதர் சங்கைக்குரிய நரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரர் பெற்றிருந்த கௌரவ விருதுகள் மற்றும் கடந்து கால நினைவுச் சின்னங்களையும் ஜனாதிபதி அவர்கள் பார்வையிட்டார்.