நவகமுவ பகுதியில் 1000 க்கும் அதிகமான துப்பாக்கி ரவைகளுடன் முன்னாள் இராணுவ வீரர் கைது

225

நவகமுவ பகுதியில் 1000க்கும் அதிகமான துப்பாக்கி ரவைகளுடன் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் இராணுவ வீரர் ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார்சைக்கிளில் கொண்டுசென்றபோது நவகமுவ பொலிஸாரின் வீதி போக்குவரத்து அதிகாரிகள் முன்னெடுத்த சோதனையின்போது துப்பாக்கி ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர் வசமிருந்த ரவைகளில் ரி – 56 ரக ரவைகள் 205, 9 மில்லிமீற்றர் அளவிலான 640 ரவைகள், ரி – 56 ரக ரவைகள் 40, ரி – 56 ரக மெகசீன் ரவைகள் 2, 9 மில்லிமீற்றர் நீளமுடைய மெகசீன் துப்பாக்கி மற்றும் துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மோட்டார்சைக்கிளின் இருக்கையின் கீழ் வெவ்வேறு பைகளில் வகைப்படுத்தப்பட்ட நிலையில் உரப்பையொன்றில் இருந்து இவை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

SHARE