நவநீதம்பிள்ளையின் உத்தியோககாலம் வருகின்ற Septemper மாதத்துடன் முடிவடைகின்றது

541

ஐ.நா மனிதவுரிமை ஆணையாளரான நவநீதம்பிள்ளை கடந்த செவ்வாய்க் கிழமை (10.06.14) கென்வ்(f) நகரில் ஆற்றிய தன் இறுதி உரையில், ஐரோப்பிய அரசியல் வாதங்களை மிகவும் பரிகாசத்திற்கு உள்ளாக்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பா முழுவதிலும் மிக வேகமாக வளர்ந்து வரும் வெளிநாட்டவர்களுக்கு எதிரான வெறுப்பும், எதிர்ப்பும் மிக ஆபத்தான விளைவைக் கொணருமென அந்த உரை எச்சரித்ததாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது வரை காலமும் தென் சூடான், சிரியா, பாலஸ்தீனம், சிறீலங்கா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இடம் பெற்ற மனிதவுரிமை மீறல்களை மிகவும் ஆர்வத்துடன் ஆக்கபூர்வமாக எதிர்த்து வந்த நவநீதம்பிள்ளை, ஐரோப்பாவில் இடம் பெறும் மனிதவுரிமை மீறல்களையும் தற்போது சுட்டிக்காட்டியமை குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐரோப்பிய மக்கள் மத்தியில் ஏற்கனவே புராதனமாக உள்ள அன்னியர் மேலான வெறுப்புணர்வும், இன வெறி சம்பந்தமான மனோபாவமும், மத சகிப்புத்தன்மையற்ற தன்மையும், ஐரோப்பிய அரசியல் வாதங்களில் தென்படுவதாக அந்த உரையில் அழுத்தமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புதிதாக ஐரோப்பியப் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட பிரதி நிதிகள் பலர், வெளிநாட்டவர்களுக்கு எதிரான வெறுப்பை விதைத்து வாக்குகளை அறுவடை செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பி(f)ரான்ஸ் நாட்டில் வெற்றியைத் தழுவிய தேசிய முன்னனியின் தலைவி மறீன் லீ-பென், அமைதியாக வீதிகளில் வணங்கிக் கொண்டிருக்கும் முஸ்லீம்களை நாசிகளுக்கு ஒப்பிட்டுப் பேசியமை ஏற்றுக் கொள்ள முடியாத மனிதவுரிமை மீறல் என அந்த உரையில் உதாரணமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நவநீதம்பிள்ளையின் உத்தியோககாலம் வருகின்ற Septemper மாதத்துடன் முடிவடைகின்றமை தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறு வருட கால சேவையின் போது பல நாடுகளில் மரணதண்டனை அகற்றப்பட்ட போதிலும்,

மனிதவுரிமை மீறலைத் தடுக்க சர்வதேசம் முழுமையான ஆதரவைத் தரவில்லையெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐ.நா பாதுகாப்பு சபை, சிரிய யுத்தம்போன்று பல யுத்தங்களைத் தடுப்பதில் வெற்றி பெறாதமையும்  உரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பல ஐ.நா உறுப்பினர்கள் நவநீதம்பிள்ளையின் சேவையைப் பாராட்டியமை குறிப்பிடப்பட்டுள்ளது.

p16

SHARE