புஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் சிறப்பு பிரிவு கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள அறையில் தொலைபேசி ஒன்று மற்றும் பல சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக, சிறப்பு அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
நேற்று (20) சிறப்பு அதிரடிப் படை குழுவினரால் உயர் பாதுகாப்பு சிறைச்சாலையின் பிரிவு Dஇன் 83வது அறைக்குள் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களில் ஒரு நவீன தொலைபேசி, ஒரு கேபிள், ஒரு சிம் கார்ட், ஒரு பேட்டரி சார்ஜர் மற்றும் அடையாளம் காணப்படாத அளவு போதைப்பொருள் ஆகியவை உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் சிறை நிர்வாக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கனேமுல்ல சஞ்சீவவின் கொலையாளி இராணுவத்திலிருந்து தப்பியோடியவரா?
கொழும்பு புதுக்கோட்டை நீதிமன்றத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட கனேமுல்ல சஞ்சீவவின் கொலையின் முக்கிய சந்தேக நபர் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் என கூறப்படுகின்றது.
கொலையின் முக்கிய சந்தேக நபர் அடிப்படைப் பயிற்சியை முடித்துவிட்டு இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் என்று இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கமாண்டோ சிப்பாயோ, உளவுத்துறை அதிகாரியோ அல்ல
அதேசமயம் சந்தேக நபர் , ஒரு கமாண்டோ சிப்பாயோ அல்லது உளவுத்துறை அதிகாரியோ அல்ல என்றும் கூறப்படுகிறது.
இராணுவப் பயிற்சியின் போது தப்பிச் சென்ற குறித்த சிப்பாய், பின்னர் பொது மன்னிப்புக் காலத்தின் கீழ் சட்டப்பூர்வமாக இராணுவத்திலிருந்து இராஜினாமா செய்துள்ளதாகவும் இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அன்றிலிருந்து அவர் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் தெரியவருகிறது.
சந்தேக நபர் சுமார் 6 கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்றும், தெஹிவளை, வட்டரப்பலவில் நடந்த இரட்டைக் கொலையிலும் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5 ஆம் எண் நீதவான் நீதிமன்றத்திற்குள் கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வரும் பொலிஸார், தற்போது சட்டத்தரணி வேடத்தில் வந்து கொலை செய்த நபர் பற்றிய தகவல்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
அதன்படி, நீதிமன்றிற்குள் துப்பாக்கிச் சூடு நடத்தியவர், கடந்த மாதம் 7 ஆம் திகதி கல்கிஸ்ஸை, வட்டரப்பல பகுதியில் இரண்டு பேரை சுட்டுக் கொன்ற துப்பாக்கிதாரி என்று பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறிய தகவல்
கனேமுல்ல சஞ்சீவ கொலையின் முக்கிய சந்தேக நபர் நேற்று (19) பிற்பகல் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் (STF) கைது செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து, பல உண்மைகளை பொலிஸாரால் வெளிக்கொணர முடிந்துள்ளது. இது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறுகையில்,
சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க, புத்தளம் பாலாவி பகுதியில் கைது செய்யப்பட்ட இந்த நபர் பல பெயர்களில் தோன்றியவர் என்று தெரிவித்தார்.