Sony நிறுவனம் Xperia Z5 Ultra எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அடுத்த வருடம் அறிமுகம் செய்யவுள்ளது.Qualcomm Snapdragon 820 Processor உடன் அறிமுகம் செய்யப்படவுள்ள இக்கைப்பேசியானது 6.44 அங்குல அளவு, 3840 x 2160 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், பிரதான நினைவகமாக 4GB RAM உள்ளடக்கப்பட்டுள்ளது.
இவை தவிர 23 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடையதும் Exmor RS சென்சாரினை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுததுவற்கான கமெராவும் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் அன்ரோயிட் இயங்குதளத்தின் பிந்திய பதிப்பான Android 6.0 Marshmallow இனையும் கொண்டதாக இக் கைப்பேசி அடுத்த வருடம் பெப்ரவரி மாதமளவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. |