நாகர்கோயிலில் விமானத் தாக்குதலில் பலியான மாணவர்களின் நினைவுத் தூபி நாளை திறந்து வைப்பு

299

நாகர் கோயில் மகாவித்தியாலம் மீது இலங்கை விமானப்படையினர் மேற்கொண்ட குண்டுவீச்சின் போது படுகொலை செய்யப்பட்ட 21 மாணவர்களின் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்ட நினைவுத் தூபி நாளை செவ்வாய்க்கிழமை நாகர் கோயிலில் திறந்துவைக்கப்படவுள்ளது. 1995ஆம் ஆண்டு செம்ரெம்பர் 22ஆம் திகதி நாகர் கோயில் மகா வித்தியாலயத்தின் மீது இலங்கை விமானப்படையினரின் புக்காரா விமானம் மேற்கொண்ட குண்டுவீச்சுத் தாக்குதலில் போது அங்கு கல்வி கற்றுக்கொண்டிருந்த 21 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்திருந்தனர். இந்த மாணவர்களின் 20 ஆவது நினைவுதினமான நாளை அவர்களின் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி நாகர் கோயில் மாகாவித்தியாலத்தில் திறந்துவைக்கப்படவுள்ளது. வடமாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு இந்த நினைவுத் தூபியைத் திறந்துவைக்கவுள்ளார்.

SHARE