நாகூர் ஹனிபா மரணம்குறித்து மு. கருணாநிதி உருக்கம் !!
பிரபல பாடகர் நாகூர் ஹனிபா சென்னையில் இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.
நாகூர் ஹனிபாவின் பாடல்கள் இல்லாத தி.மு.க மாநாடே இல்லை என்று கூறும் அளவிற்கு அவரது பங்கு அளப்பரியது…!மு. கருணாநிதி உருக்கம்.
Posted by Pirabakaran Piraba on Wednesday, April 8, 2015
இறைவனிடம் கையேந்துங்கள் உள்ளிட்ட பல்வேறு புகழ்பெற்ற பாடல்களை பாடியவர் நாகூர் ஹனிபா. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள இல்லத்தில் உடல்நலக் குறைவு காரணமாக நாகூர் ஹனிபா உயிர் இன்று பிரிந்தது. அவருக்கு வயது 90.
இஸ்லாமிய, திராவிட இயக்கப் பாடல்கள் பாடி புகழ் பெற்ற ஹனிபா தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராகவும் மக்கள் பணியாற்றி உள்ளார்.