நாடு கடந்த தமிழர்களும் விடுதலைப்புலி இயக்கமும்-பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு பயத்தினால் விட்ட செய்தி

634

ltte-in-swiss

Modus_Operandi_20140605_05home பயங்காரவாத அமைப்பாக உலகில் அடையாளம் காணப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் 30 வருட காலமாக யுத்தம் நடைபெற்று வந்தமை யாவரும் அறிந்ததே. இந்த  பயங்கர வாதத்தை 2009 ஆம் ஆண்டு அரசு இராணுவம், பொலிஸ், சிவில் பாதுகாப்பு படை, இராணுவ புலனாய்வு மற்றும் நாடளாவிய பொது மக்களின் தியாகத்தினால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு நாட்டில் சாமாதானம் ஏற்படுத்தப்பட்டது. தமிழ் மக்களின் நலனுக்காகவென எல்ரீரீ அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வந்த அனைத்து நடவடிக்கைகளும் முறியடிக்கபட்டமை குறிப்பிடத்தக்க இன்னுமொரு விடயமாகும்.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், அச்சுறுத்தல்கள் முழுமையாக நிறைவடைந்து விடுமா? நாடு எந்த விதமாக யுத்ததிற்கு பிந்திய சவால்களுமின்றி சாதாரண வழமை நிலைக்கு திரும்பி விடுமா? பாதுகாப்புக்கள் தளர்த்தப்படுமா? இவை விடை காணவேண்டிய ஏற்புடைய கேள்விகளாகும்….

2009க்கு பின் அடையாளம் காணப்பட்ட சவால்கள்

-எல்ரீரீஈ அமைப்பு சர்வதேச ரீதியில் மீள உருவாகின்றமை

-இலங்கையில் பயங்கரவாதம் மீண்டும் எழுச்சி

-இலங்கையில் உள்ள குழுக்கள் தீவிரவாதத்தை ஏற்பாடு செய்கின்றன.

-புவியியல் மற்றும் சர்வதேச அபிவிருத்திகளின் தாக்கம்

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு 2009 க்கு முன்னர்

எல்ரீரீஈ இயக்கத்தின் பயங்கரவாத செயற்பாடுகள் இராணுவ ரீதியாக முறியடிக்கப்பட்டதுடன் அதன் தலைவர் பிரபாகரனின் தலைமைத்துவமும் முற்றாக அழிக்கப்பட்டது இருந்தும் கஸ்ட்ரோ போன்ற சர்வதேச வலையமைப்புக்களும் தனி நபர்களும் அவ்வியக்கத்திற்காக இன்னும் வெளி நாடுகளில் செயற்பட்டு வருகின்றனர். 2009 க்கு முன்னர் எல்ரீரீஈ இயக்கத்தின் வளர்ச்சியில் சர்வதேச ரீதியாக ஒரு மில்லியன் புலம் பெயர் தமிழர்கள் பங்களித்து வந்தனர் மற்றும் இதில் மூன்றில் இரண்டு பங்கினர் கனடா ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளில் இருந்து எல்ரீரீஈ இயக்கத்தின் வழர்ச்சிக்கும் அதன் சர்வதேச தொடர்புகளுக்கும் நிதியுதவி வழங்கி வந்தனர். ஆனால் 2009 ஆம் ஆண்டு யுத்த நிறைவின் பின்னர் இவ்வாரான இயக்கங்களினால் இலங்கைகு எதிராக முன்னெடுக்கப்படும் நிகழ்வுகளில் பங்கு கொள்ளும் புலம் பெயர் தமிழர்களின் தொகையானது முன்பு காணப்பட்ட 15000 தொடக்கம் 20000 வரையிலான தொகையிலிருந்து சில நூறுகளாக குறைவடைந்துள்ளது.

புலம் பெயர் தமிழர்களினதும் எல்ரீரீஈ சார்பு அமைப்புக்களினதும் பரப்பு

புலிகளின் வெளிநாட்டு விரிவாக்க முறைமை

பிரபாகரனின் பின்னர் தமைத்துவத்திற்கான உள்ளக மோதல் நிலவியதுடன் புலிகளின் வெளிநாட்டு வலையமைப்புக்கள் நான்கு பிரிவுகளாக பிரிந்தது. அதாவது வீ. ருத்ரகுமாரனால் நாடு கடந்த தமிழீழ அரசு, நெடியவனால் ஆரம்பிக்கப்பட்ட டிசிசி, விடுதலைபுலி இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவில் நான்காவது தலைவராக இருந்த வினாயகத்தினால் உருவாக்கப்பட்ட தலைமக் காரியாலயக்குழு என பிரிந்து செயற்பட்டது, விடுதலைபுலி இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவில் நான்காவது தலைவராக இருந்த வினாயகம், நெடியவனுடன் இணைந்து செயற்பட்டதுடன் கடைசி மனிதாபிமான நடவடிக்கைளின் போது பிரான்சுக்கு சென்று பின்னர் தனக்கென ஒரு குழுவை அமைத்து கொண்டார், ஐந்தாவது குழு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் செயற்பட்டு வந்தது இக்குழுவின் தலைவன் தேவியன் இந்த வருடம் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டார்.

எல்.ரீ.ரீ.ஈ யினது சர்வதேச வலையமைப்பு

உலக தமிழர் பேரவையின் அமைப்பாளர் பாதர் இமானுவல் சர்வதேச ரீதியாக இயங்கி வரும் குழுக்களின் முக்கிய செயற்பாட்டாளராக திகழ்ந்தவர், இவர் அனைத்து குழுக்களுக்குமிடையில் அதாவது ருத்ரகுமாரன், நெடியவன் மற்றும் ஏனைய குழுக்களுக்குமிடையில் தொடர்பாடலை பேணி வந்ததுடன் அனைவரையும் இணைத்து செயற்பட்டார், அத்துடன் மனித உரிமை குழுக்கள் மற்றும் வெளி நாட்டு பிரதிநிதிகளுடனும் உறவுகளை பேணி வந்தார். எது எவ்வாறாயினும் இக்குழுக்கள் அனைத்தும் வடக்கு கிழக்கு மக்களை அனுக முயற்சிக்கினறன, அத்துடன் இக் குழுக்கள் அனைத்தும் எல்ரீரீஈ செயற்பாட்டாலர்கள், முன்னாள் போராளிகள், அரசியல்வாதிகள், அரச சார்பற்ற அமைப்புக்கள் என எல்ரீரீஈ உடன் தொடர்புபட்டவர்களுடனேயே தொடர்புகளைப் பேனிவருகின்றன..

2009 ஆம் ஆண்டு எல்.ரீரீஈ இயக்கம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் பயங்கரவாத நடவடிக்கைகளை தொடர முடியாத நிலை காரணமாக ருத்ரகுமாரன் உள்ளிட்ட மற்றய தலைவர்களும் வெளி நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.

நாடு கடந்த தமிழீழ அரசு

நெடியவனின் குழு

பி. சிவபரன் என்றழைக்கப்படும் நெடியவன் விடுதலைப் புலிகளின் ஆரம்ப காலத்திலிருந்து இருந்து வந்தவராகும் இவர் முதலில் தமிழீழ மக்கள் பேரவையை நிறுவினார் பின் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவை நிறுவினார், இலங்கை இராணுவத்திற்கு இக்குழுவை எளிதாக கன்டுபிடிக்க முடிந்ததனால் இக்குழுவின் பெயரை அடிக்கடி மாற்றவேண்டியிருந்தது. அத்துடன் புலம் பெயர்ந்த அமைப்புக்களின் தகவல்களை பராமரிக்கும் பொறுப்பும் நெடியவனால் மேற்கொள்ளப்பட்டது.

தமிழீழ விடுதலை புலிகளின் முன்னணி அமைப்புகள், ஊடகங்கள் மற்றும் உளவுத்துறை பிரிவுகளை கட்டுப்படுத்தும் பணிகளும் நெடியவனால் மேற்கொள்ளப்பட்டது.

2013 இல் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் எல்.ரீ.ரீ. ஈ அங்கத்தவர்கள்

வினாயகம் என்பவருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கையை விடுக்கப் பட்டிருந்தது ஆனால் அவர் புலிகளின் பாதாள உறுப்பினர்கள் மற்றும் குற்றவியல் சக்திகளுடன் தொடரந்து தொடர்பில் இருந்தார். இவர்கள் இரண்டு கப்பல்கள் மூலம் மக்களை கனடாவிற்கு நாடு கடத்தினர் அனால் இவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டிருநதும் கூட அவர்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த்து..

உலக தமிழர் பேரவை

Fr Emmanuel with Prabakaran

Fr Emmanuel addressing an event in Germany

Fr Emmanuel with Castro

Fr Emmanuel with Rudrakumaran

1 டிசம்பர், 2013 இல் கிழக்கு மாகாணத்தில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த குடும்பங்கள் மீள் குடியேற்றம்

1 டிசம்பர், 2013 இல் வட மாகாணத்தில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த குடும்பங்கள் மீள் குடியேற்றம

Suren Surendran (BTF) with David Miliband

Fr Emmanuel with Alastair Burt, Minister of State, UK,

 Fr Emmanuel with David Miliband

Fr Emmanuel addressing the House of Commons in the UK

இலங்கைக்கு எதிராக எல்ரீரீஈ அமைப்பின் செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்கும் ஊடகங்கள், உள்ளூர் அரசியல் கட்சிகள், மனித உரிமை ஆர்வலர்கள், மற்றும் சில நிறுவனங்களுக்கு நிதியளிப்பதற்கு புலிகளின் சர்வதேச வலையமப்பு சட்டவிரோத வழிகளில் நிதி சேகரிக்கின்றன.

வட மாகாணத்தில் ஜனநாயகத்தை மீண்டும் ஸ்தாபிப்பதற்கான வாக்கெடுப்பு

2005 இல் ஆவுஸ்திரேலிய பிரஜா உரிமை பெற்ற தமிழ் இளைர்களுக்கான பயிற்சி

விடுதலை புலிகளுடனான சம்பவியின் இணைப்பு

சனல் – 4 தொலைக்காட்சியில் பாசாங்கு காட்டும் முகமாக தோன்றிய தமிழ்வானி ஞானகுமார் ஒரு விடுதலை புலிகளின் செயற்பாட்டாலராவார். அவர் ஐக்கிய இராட்சியத்தின் பிரஜா உரிமை பெற்ற ஒருவராவார். இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகளின் இறுதிப் பகுதியில் இலங்கை வந்த அவர் எல்.ரீ.ரீ.ஈ அமைப்பில் பயிற்சி பெற்றுள்ளதுடன் புலிகலின் கஸ்ட்ரோ அமைப்பில் பணியாற்றி வந்துள்ளார். இவர் இலங்கைக்கு வருவதற்காக பிரித்தானியாவில் இருந்து வந்தது முதல் அவர் எங்கே இருக்கின்றார் என பிரித்தானியாவுக்கு கூட தெரியாமல் இருந்துள்ளதுடன் அவர் எங்கே இருக்கின்றார் என தமது உறவினர்களுக்கு கூட தெரிவித்திருக்கவில்லை.. உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் முகாமில் மட்டுமே அவர் தான் ஒரு பிரித்தானிய பிரஜை என குறிப்பிட்டிருந்தார். அத்துடன் ஏ.பீ.சீ தொலைகாட்சியில் தோன்றிய மீனா கிரிஷ்னமூர்த்தியும் ஓர் எல்.ரீ.ரீ.ஈ செயற்பாட்டாளர் என்பதுடன் அவர், ஐரோப்பாவில் இருந்து அழைத்துவரப்பட்ட பிரிவினருடன் வன்னியில் பயிற்சி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எல்ரீரீஈ அமைப்பினருக்கு பதுங்கு குழிகளை நிர்மானம் செய்யும் பொறியாளராக இருந்த அருனாச்சலம் ஜெகதீஸ்வரன் என்பவர் மனிதாபிமான நடவடிக்கைகளின் போது வன்னியில் வைத்து கைது செயப்பட்டார். 2006 ஆம் ஆண்டு பிரித்தானிய அதிகாரிகளினால் தண்டிக்கப்பட்ட சாந்தன் எனும் இவரது சகோதரன் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள விடுதலைப்புலிகளின் தலைவராக இயங்கி வந்தார். மேலும் ஜகதீஸ்வரன், தமிழ்வானி ஞானகுமார் மற்றும் மீனா கிருஷ்ணமூர்த்தி இடையே ஒருங்கிணைந்து செயற்பாடுகளையும் மேற் கொண்டு வந்தார்.

பாதுகாப்பு படைகளின் வரிசைப்படுத்தல் ஜனவரி 2008

பாதுகாப்பு படைகளின் வரிசைப்படுத்தல் ஜனவரி 2013

யாழில் உயர் பாதுகாப்பு வலயங்கள் குறைப்பு

முன்னய உயர் பாதுகாப்பு வலயம்

தற்போது காணப்படும் இராணுவ முகாம்கள்

பாதுகாப்பு படைகளின் பாவனையில் இருந்த வடக்கு தனியார் காணிகள் மீள ஒப்படைப்பு.

பாதுகாப்பு படைகளின் பாவனையில் இருந்த வடக்கு தனியார் காணிகள் மீள ஒப்படைப்பு.

தமிழீழ விடுதலை புலி இயக்கமானது தலைமுறை தலைமுறையாக யுத்தம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றது இவர்களது முதலாவது தலைமுறையினர் இலங்கையராகும், மூன்றாவது தலைமுறையினர் வெளிநாட்டு பிரஜா உரிமை பெற்றவராகவும் இருப்பர். ஐரோப்பிய நாடுகளில் வசிக்கின்ற தமிழீழ விடுதலை புலி அங்கத்தவர்கள் தங்களது பிள்ளைகளிக்கு எல்ரீரீஈ அமைப்பின் உருவாக்கம் மற்றும் செயற்பாடுகளை கற்பிப்பதற்கான பாடசாலைகளையும் நிருவியுள்ளனர்.

எல்ரீரீஈ அமைப்பின் சித்தாந்தத்தை கற்பிக்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலைகள் இலங்கையில் தமிழ்ச்சோலை என்றழைக்கப்பட்டது இவை 1995 ஆம் ஆண்டு வெளி நாடுகளிலும் நிருவப்பட்டன. இந்த பள்ளிகள் அந்தந்த நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டதுடன், 350 க்கும் அதிகமான தமிழ்ச்சோலைப் பாடசாலைகள் 20,000 மாணவர்களை உள்ளடக்கியதாக இயங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது..

இலங்கையில் பயங்கரவாதத்தின் மீள் எழுச்சி

2009 ஆம் ஆண்டில் இருந்து இலங்கையில் எல்ரீரீஈ அமைப்பை மீள ஒன்றிணைப்பதற்கான மூன்று முயற்ச்சிகள் மேற்கொள்ளப்படன. அண்ணளவாக 2000 எல்ரீரீஈ போராளிகள் மனிதாபிமான செயற்பாடுகளின் போது தப்பியோடி இலங்கையில் அல்லது வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். வெளிநாடுகளில் உள்ள புலிகளுக்கு சார்பான குழுக்கள் இலங்கையில் மீண்டும் ஒரு ஆயுத போராட்டத்தை தொடங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகின்றன. மேலும் இக்குழுக்கள் அண்மையில் தப்பியோடியவர்களுடன் தொடர்புகளை பேணி வருகின்றன.

சிறந்த பாதுகாப்பு முறைமை மற்றும் புலனாய்வு பிரிவுகளை பராமரிப்பதன் மூலம் புலிகள் சார்பு குழுக்களின் மூலம் எடுக்கப்படும் பயங்கரவாத முயற்சிகள் முறியடிக்கப்படுகின்றன.

வினாகயம் என்ற நபரின் தலைமையில் பிரான்சில் இருந்து செயல்படும் கமலநாதன் சதீஸ்குமாரின் (குமனன்) அறிவுறுத்தல்களுக்கமைய ஈபிடிபி யின் ஒரு அங்கத்தவரான வேலாயுதம் ரகுநாதன் ஒரு எல்ரீரீஈ குழுவினரால் 2010 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். குமனன் 2011 ஆம் அண்டு இந்தியாவிற்க்கு சென்று 15 முன்னாள் விடுதலை புலி போராளிகளை சந்தித்து இலங்கையின் அமைதியை சீர்குலைக்க திட்டம் தீட்டினர் இதன் மூலம் முன்று குழுக்கள் உருவாக்கப்பட்டு எல்ரீரீஈ அமைப்பு தொடர்பாக தகவல்களை வழங்குபவர்கள் மற்றும் அரசுக்கு சார்பானவர்களை கொலை செய்வதற்காக இலங்கைக்கு அனுப்பப்பட்டனர்

நிதி பரிமாற்றங்கள் தொடர்பில் இந்தியாவில் இருந்து செயற்படும் எல்ரீரீஈ வலையமைப்பு

முன்னாள் புலிகள் உறுப்பினர் ஒருவர் டிசம்பர் 2012 ல் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டதன் மூலம் ஐரோப்பாவிலுள்ள வினாயகம் மற்றும் நெடியவனின் நிதியளிப்பில் சென்னையில் இருந்து செயட்பட்டு வரும் புலிகளின் வலையமைப்பு ஒன்றும் வெளிச்சத்துக்கு வந்த்து மேலும் வெளி நாடுகளில் உள்ள புலிகளின் தலைமை உறுப்பினர்கள் மீனவர் சமுதாயத்தில் இருந்து ஆழ்கடல் மீன்பிடி அனுபவம் உள்ள மற்றும் தொழிநுட்ப அறிவுள்ள இளைஞர் யுவதிகளை இயக்கத்தில் இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைறும் தெரிய வந்தது.
மீள் உருவாக்கப்படும் எல்ரீரீஈ வலைமைப்பின் சர்வதேச மற்றும் இலங்கை தொடர்புகள்

2013 செப்டம்பர் வரையான கண்ணிவெடி அகற்றல்

2013 செப்டம்பர் வரையான கண்ணிவெடி அகற்றல்

கண்ணிவெடிகளை அகற்றல்

பாதுகாப்புப் படையினரால் தேடப்பட்டு வந்த கோபி என்றழைக்கப்படும் கஜீபன் பொன்னையா செல்வநாயகம், மற்றும் தேவியன் என்றழைக்கப்படும் சுந்தரலிங்கம் கஜீபன் ஆகிய இருவர் உட்பட, மூன்றுபேர் இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டம் நெடுங்கேணி பிரதேசத்தில் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
விடுதலைப்புலிகளின் இப்போதைய உயர் மட்ட உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்பட்ட இவர்கள் இராணுவத்தினர் மேற்கொண்டிருந்த சுற்றி வளைப்பு தேடுதல் நடவடிக்கையொன்றில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்டபோது இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்திலேயே கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்டவர்களில் மூன்றாவது நபர் அப்பன் என்றழைக்கப்படும் விடுதலைப்புலி சந்தேக நபர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளை மீண்டும் ஒன்றிணைக்கும் முயற்சியில் கோபி என்பவர் ஈடுபட்டிருந்ததுடன், இவர் தன்னைத் தேடிச் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவரை கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தி காயப்படுத்திவிட்டு தப்பியோடியமையும் குறிப்பிடத்தக்கது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு பேருவளையில் சந்தேகத்துக்கிடமான ஒரு படகு விலைக்கு வாங்கப்பட்டமை தொடர்பில் மனரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இதற்கான 2.3 மிலியன் ரூபா பணம் பிரபாகரனின் சாரதியான பிரான்சில் வசிக்கும் அவரது சகோதரனால் வழங்கப்படிருந்ததுடன் மீதி சுவிஸ் நாட்டில் இருந்து கிடைக்கப் பட்டிருந்தது. இந்தியாவுடன் தொடர்பு கொள்ளும் நோக்குடனும் போராளிகளை இடம் மாற்றுவதற்காகவும் இப்படகு இவரால் கொள்வனவு செய்யப்பட்டிருந்தது.

இந்த சம்பவங்கள் அனைத்தும் இன்னும் செயலில் உள்ள விடுதலை புலிகளின் பரந்த உலகளாவிய வலைப்பின்னலை நிரூபித்து காட்டுகினறன.

புலிகளின் சர்வதேச வலைப்பின்னல் – ஒரு கண்ணோட்டம்

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை தீர்மானங்கள் 1267 மற்றும் 1373

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை தீர்மானங்கள் 1267 மற்றும் 1373 அகிவற்றில் 1272 அல்கைதாவை கண்காணிக்கவும், 1373 பயங்கரவாத அமைப்புக்களின் நிதி சேகரிப்பதை கட்டுப்படுத்தும் முகமாக அமரிக்காவினால் கொண்டுவரப்பட்ட இத்தீர்மானத்தினாக பல நாடுகள் நிதியியல் புலனாய்வு பிரிவுகளை ஏற்படுத்தி செயற்பட்டன. இதற்கமைய இலங்கையும் மத்திய வங்கியின் கீழ் சர்வதேச நாணய நிதியத்தினூடாக இது போன்ற ஒரு பிரிவை ஏற்படுத்தி பயனடைந்தது.
இலங்கையில் பயங்கரவாத அமைப்புகளாக அடையாளப்படுத்தி தடைசெய்யப்பட்டுள்ள 16 அமைப்புகள் மற்றும் 424 தனிப்பட்டவர்கள் தொடர்பிலான விபரங்கள் இராஜதந்திர ரீதியில் தூதரகங்கள் ஊடாக சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

“இலங்கையில் பயங்கரவாத அமைப்புகளாக இனங்கண்டு தடைசெய்யப்பட்டுள்ள அமைப்புகள் மீதான தடையை தான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென கனடா தெரிவித்துள்ளது. தடை செய்யப்பட்டுள்ள 16 அமைப்புகளில் விடுதலைப்புலிகள் அமைப்பும் உள்ளடங்குகின்றது. இந்த அமைப்பை ஏற்கனவே கனடா அரசு தடை செய்திருந்தது. இந்நிலையிலேயே இக்கருத்தையும் தெரிவித்திருக்கின்றனர்.

இவ்விடயத்தை கருத்தில் கொள்ளாமல் இக்கூற்றைத் தெரிவித்தனரா எனத் தெரியவில்லை. எனினும் இவ்வமைப்பு தொடர்பில் கனடா அரசு உரிய நடவடிக்கை எடுக்குமென நம்புகின்றோம். பயங்கரவாதம் என்பது இலங்கைக்கு மட்டுமல்ல சர்வதேசத்திற்கும் அச்சுறுத்தலான விடயமாகவும் உள்ளது.

இதேபோல விடுதலைப்புலிகள் அமைப்பு புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவியுடன் தொடர்ந்து செயற்பட்டு வருவதை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளது. அமெரிக்காவிலும் இவ்வமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியிலும் இவ்வமைப்பை அச்சுறுத்தலான அமைப்பென்றே கருத்தில் கொள்கின்றனர். வேறெந்த நாடும் இவ்விடயம் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை.

இந்த வலையமைப்புக்கள் இலங்கையிந் உளவுத்துறையை தெளிவாக அடையாளம் காட்டுகின்றன, புலம் பெயர்ந்த 424 நபர்களுக்கும் 16 குழுக்களுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளின் குழுக்களுக்குமிடையில் (டிஜிடிஈ, ஜிடிஎப், டிசிசி,) தெளிவான தொடர்புகள் உள்ளன. இது தொடர்பான தகவல்கள் 2007 அம் ஆண்டு முதல் இன்று வரை தொகுக்கப்பட்டுள்ளது.

பிற்குறிப்பு

இலங்கையானது 2009 ஆம் ஆண்டின் பின்னர் அமைதியான, பாதுகாப்பான மற்றும் நிலையான நாடாக உள்ளது, ஆனால் நாட்டில் ஸ்தீர தன்மையை அழிக்கக்கூடிய பயங்கரவாத நடவடிக்கைகள் மீண்டும் ஏற்பட வாய்ப்புக்கள் காணப்படுவதனால் அதை முறியடிக்ககூடிய ஏற்பாடுகள் விரைவில் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. ஒரு குறுகிய கால, நடுத்தர மற்றும் நீண்ட கால பாதுகாப்பு மூலோபாயத்துடன் முழு உளவுத்துறையும் விழிப்புடன் செயற்படுகின்றது. அவர்கள் இந்த நாடு மீண்டும் நாம் 30 ஆண்டுகாலமாக முகம்கொடுத்த ஒரு மோதல் நிலைக்கு தள்ளப்பட்டும் இருண்ட நாட்களை நோக்கி செல்ல அனுமதிக்க மாட்டார்கள். மேலும் தமிழீழ விடுதலை புலிகள் (நோர்வே மற்றும் சுவிச்சர்லாந்து தவிர) ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், கனடா, இந்தியா, அமெரிக்கா உட்பட பல நாடுகளில் தடை செய்யப்படுள்ளது.
எனினும், தமிழீழ விடுதலை புலிகளின் சர்வதேச வலையமைப்பானது முக்கியமாக மேற்கிலேயே செயற்பட்டு வந்தது. அமைதி மற்றும் நாட்டின் ஸ்திரத்தன்மையை அழிப்பதில் முக்கிய பங்கு வகித்த அதே அமைப்புக்கள் இன்று புலிகளின் கருத்தியல் மற்றும் புறநிலையை தொடரும் வகையில் செயற்படுகினடறமையும் குறிப்பிடத்தக்கது.

 

SHARE