நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடை மழை! வெளியான அறிவிப்பு….

303

நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம் இடைக்கிடை மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டத்திலும் மழை பெய்யும் என எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்திலும், களுத்துறை, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடை இடியுடன் கூடிய அல்லது மழை பெய்யும் எனவும் பெரும்பாலும் மாலை வேளையில் இவ்வாறு இடைக்கிடை மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இடி,மின்னல் தாக்கம் தொடர்பில் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

SHARE