நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல்

398

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

கடந்த ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குலின் பின்னர் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்தே பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோர் குறித்த கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இக் கலந்துரையாடல் இன்று அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பில் நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமை குறித்தும் பொருளாதார ரீதியால் மக்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளமை குறித்தும்  அரசாங்கம் இவ் விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தி மக்களுக்கு ஏதெனும் வகையில் உதவி வழங்குவது தொடர்பிலும்  கலந்துரையாடப்பட்டுள்ளது.

SHARE