நாட்டில் மீண்டும் பயங்கரவாதத்தை உருவாக்க சிலர் முயற்சித்து வருவதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

445
நாட்டில் மீண்டும் பயங்கரவாதத்தை உருவாக்க சிலர் முயற்சித்து வருவதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

அத்தனகல்ல பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க போன்ற மேற்குலக நாடுகளுக்கு அடிமைச் சேவகம் செய்யும் ஓர் தலைவரிடம் ஆட்சிப் பொறுப்பினை ஒப்படைத்து, புலிப் பயங்கரவாதத்தை மீள உருவாக்க முயற்சிக்கப்படுகின்றது.

நாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்டெடுத்த ஜனாதிபதியின் கரங்களை மேலும் பலப்படுத்த வேண்டும்.

போர் வென்றெடுக்கப்பட்டு நாடு பொருளாதார ரீதியில் அபிவிருத்தியை எட்டி வரும் நிலையில், தமிழர் புலம்பெயர் சமூகத்தின் அழுத்தங்கள் காரணமாக சில மேற்குலக நாடுகள் இலங்கையில் மீளவும் பயங்கரவாதத்தை உருவாக்க முயற்சிக்கின்றன.

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் லட்சக் கணக்கான புலி ஆதரவாளர்கள் வாக்காளர்களாக இருக்கின்றார்கள்.

அந்த நாடுகளின் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதில் புலி ஆதரவாளர்களுக்கு பங்கு உண்டு.

எனவே மேற்குலக நாடுகள் இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றன என பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

தர்கா நகர் இழப்புகளுக்கு அரசாங்கம் நஷ்டஈடு வழங்காது- ஜே.வி.பி

பேருவளை தர்கா நகரில் 2006 ஆம் ஆண்டு ஏற்பட்ட மோதலின் போது அழிந்து போன சொத்துக்களுக்காக இழப்பீடு வழங்கப்படாத நிலையில், அண்மையில் ஏற்பட்ட சொத்து சேதங்களுக்கு இழப்பீட்டை அரசாங்க வழங்கப் போவதில்லை என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

2006 ஆம் ஏற்பட்ட இழப்புகளுக்காக 20 மில்லியன் நஷ்டஈட்டை வழங்க அமைச்சரவையிலும் அனுமதி கிடைத்திருந்தது.

எனினும் இந்த நஷ்டஈடு இன்னும் வழங்கப்படவில்லை. இழப்பீட்டை வழங்க அரசாங்கம் நிதி இல்லை என்று கூறியது.

இவ்வாறான நிலையில், அண்மையில் ஏற்பட்ட வன்முறைகளில் ஏற்பட்ட இழப்புகளுக்கு அரசாங்கம் எந்த வகையிலும் நஷ்டஈட்டை வழங்காது என்றும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

 

SHARE