நாட்டுப்பற்றாளர் மிகவும் செறிவானதும் மிகவும் ஆணித்தரமானதுமான ஒரு செய்தியையே தமதுவாழ்வினூடாக சொல்லிவிட்டு போயிருக்கிறார்கள்

299

 

மீண்டும் மீண்டும் பூபதிஅம்மாவின் நினைவுநாள் வரும்போதெல்லாம் இந்தபோராட்டத்துக்காக தமது மக்களை அளித்த அம்மாக்கள் அனைவரும் அதற்கும் மேலாகஇந்த விடுதலைப்போராட்டம் வெற்றிகளையும் அடையவேண்டும் என்பதற்காக தாமேமுன்வந்து செயற்பட்ட எண்ணற்ற தாய்களும் நினைவில் வந்துபோவர்.

அன்னைபூபதி என்பது விடுதலைக்கான போராட்டத்தில் ஒரு பெரும் குறியீடாகஎன்றென்றும் வாழும். விடுதலைப்போராட்டம் என்பது தனித்து ஆயுதந்தரித்தபோராளிகளினதும் அரசியல் வேலைசெய்யும் போராளிகளதும் தனி முயற்சி மட்டும்அல்ல.ஆயதந்தரித்த ஒரு போராட்ட அமைப்பின் பின்னால் அணிதிரளும் ஆயிரம்லட்சம் மக்களது ஒன்று திரண்ட போர்க்குரலே விடுதலைப்போராட்டம் என்பதற்கு ஒருகுறியீடாக பூபதிஅம்மாவின் போராட்டமும் அதில் அவர் காட்டிய உறுதியும் இறுதியில்அதற்காகவே தன்னை அர்ப்பணித்து மரணித்ததும் திகழ்கிறது.

ஒரு புரட்சியோ அன்றி விடுதலைப்போராட்டமோ தாய்மார் விடும் கண்ணீருக்குள்ளாகவேபிறப்பெடுப்பதை உலக வரலாறுமுழுதிலும் அதன் பக்கங்கள் ஒவ்வொன்றிலும்பார்க்கமுடியும்.தாய் வடிக்கும் கண்ணீரின் வலிமை மகத்தானது.அது எத்தனையோசாம்ராஜ்யங்களையும்,பேரரசுகளையும்,சர்வாதிகாரத்தையும்,ஒடுக்குமுறையையும் வீழ்த்திமண்ணோடு மண்ணாக்கி அதன்மீது நீதியை நிறுத்தியுள்ளதை சரித்திரம் திரும்பதிரும்ப சொல்லி சொல்லி வந்துகொண்டிருக்கிறது தமிழீழத்திலும் அதுதான் நடந்தது.

தமிழீழவிடுதலை போராட்டத்தை முன்னெடுப்பதற்கான உணர்வை தனக்கு தந்த நிகழ்வாகதேசியதலைவர் குறிப்பிடும் நிகழ்வும் ஒரு தாயின் கண்ணீர்தான்.1958ம்ஆண்டுகலவரத்தில்பாதிக்கப்பட்ட ஒரு விதவைத்தாயின் கண்ணீர்தான் தமக்குள் பல அதிர்வுகளைஉருவாக்கி இந்த இனத்துக்கான விடுதலைப்போராட்டத்துள் இறங்க வைத்ததாகதேசியதலைவர் தமது ஒவ்வொரு நேர்காணலிலும் குறிப்புகளிலும் சொல்லிவந்திருக்கிறார்.

ஒரு இனத்தின் தேசியவிடுதலைக்கான தலைவனையே உருவாக்கும் ஆற்றல்மிக்கதாக தாயின்கண்ணீர் அமைந்திருக்கிறது.ஒரு கட்டத்தில் கொடுமைகளையும் அநீதிகளையும் கண்டு அழுது கொண்டிருந்த தாய்மார்அதன் பின்னர் அந்த கொடுமைகளுக்கு எதிராக அந்த அடக்குமுறைகளுக்கு எதிராககிளர்ந்துஎழுந்து போரிடும் தமது பிள்ளைகளுக்கு துணையாக களம்காணும் நிகழ்வுகளும் வரலாறு முழுதும்எல்லா விடுதலைப்போராட்டங்களிலும் காணக்கிடைக்கின்றன.

உலகில் நடந்தேறிய புரட்சிகள் அனைத்திலும் இந்த காட்சியே திரும்ப திரும்ப வந்துபோகிறது.ருஸ்யபுரட்சியின்போது மக்கள் எவ்வாறு அணிதிரண்டார்கள் எவ்வாறு எல்லா மக்களும்எழுந்தார்கள் என்று அழகாக விபரிக்கும்மார்க்சிம் கோர்க்கி என்ற அற்புதமானபடைப்பாளி செதுக்கிய தாய் என்ற உலகப்புகழ்பெற்றநாவலிலும் பெலகேயா நீலவ்னாஎன்ற தாய் எவ்வாறு ஒரு புரட்சிகர தாயாக மாறுகிறாள் என்பதையே காட்டுகின்றது.சாதாரண அம்மாக்கள் போலவே அடுப்படியில் நெருப்புடன் வெந்து ஆலை சங்கு ஊதியதும்வேலைக்கு போகும் கணவனுக்கு உணவு செய்யவும் மீண்டும் ஆலை சங்கு ஊதியவுடன் வீட்டுக்குவருபவர்களுக்கு உணவு தயாராக வைத்திருக்கும் ஒருத்தியாகவேஇருக்கிறாள்.

அவளுக்கு அரசியல் எதுவுமே தெரியாமலேயே வெளி உலகம் நகர்ந்து கொண்டேஇருக்கிறது.ஆனால் அவளின் மகன் பாவேல் மூலமாக அவளுக்குள்ளும் பெருந்தீ ஒன்றின்சின்னஞ்சிறு பொறி ஒன்று விழுகிறது.பாவேல் ஒரு புரட்சியாளனாக மக்களின்விடுதலைக்கான ஒரு போராளியாக மாற மாற அவளும் அதே மாற்றத்துடன் மாறுவதுதான் உலகவிடுதலை அமைப்புகளின் மகன்கள் அனைவரதும் தாய்மாருக்கும் பொருந்தும்.மிக மிக நுணுக்கமான முறையில் தாய் ஒருத்தியின் உணர்ச்சியை தொட்டு சொலல்லும்இந்த தாய் நாவலின் தாயைபோன்றே ஈழத்திலும் தாய்மார் தமது பிள்ளைகளின்பாதுகாப்பு பற்றியேமுதலில் அக்கறையும் ஆதங்கமும் கொண்டிருந்தாலும் விடுதலைப்போராட்டத்தின் பெருந் தீஅனைவரையும் தொட்டும் உரசியும் செல்ல செல்ல அவர்களும் அதனுள் இணைவது வரலாற்றின்ஓட்டத்தில் மிக இயல்பாகவே நடந்துள்ளதை காட்டும் ஒரு பதிவுதான் பூபதிஅம்மாவின் போராட்டமும் அவரின் தியாகமும்.

எப்படியான ஒரு போராட்ட சூழலில் அன்னை பூபதியின் உண்ணாவிரதம் ஆரம்பிக்கிறதுஎன்று பாருங்கள்.அவர் ஆழமாக நேசித்த அவளின் பிள்ளைகளின் போராட்டத்தைநசுக்கி எறியவென்று உலகின் நான்காவது ராணுவம் தனது கனரகஆயுதங்களுடன் வந்து இறங்கிநின்று மெது மெதுவாக சுதந்திரப்போராட்டத்தை அழிக்க முயன்ற வேளையில்தான் பூபதிஅம்மா மாமாங்கம் வீதியிலே நீதி கேட்டு பசியுடன் அமர்ந்தார்.இது உண்மையிலேயே ஒரு விடுதலைப்போராட்டத்தின் பரிணாம வளர்ச்சியின் இன்னொருபக்கம்தான்.போராளிகள் மட்டுமே போராடி விடுதலையை எடுத்து தருவார்கள் என்றநினைப்பில் இருந்த மக்கள் மத்தியில் இருந்து ஒரு பெண் அதுவும் ஒரு தாய் தானாகவேநேரடியாக களத்தில் பாரதப்படைகளின் கொடுமைகளுக்கு எதிராக இறங்கியது.ஒரு பெரும் மாயை எமது மக்களை சூழ்ந்திருந்த பொழுதில் அன்னை பூபதி அதனைதுடைத்தெறிய துணை நின்றவர்.

பாரதபடைகள் எமது விடுதலைக்காகவும் எமது மக்களின்உரிமைகளை பெற்றுத்தரவே வந்து இறங்கி இருப்பதாக நம்பி வரவேற்றுக்கொண்டிருந்தஎமது மக்களுக்கு இந்திய படைகளினதும் இதனை அனுப்பிய அரசின் தலைமையினதும் கபடநோக்கம் பற்றி புரிய வைக்க தனது உயிரை தந்தவர் பூபதிஅம்மா.விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராளியாக அரசியல் பொறுப்பாளனாக இருந்த திலீபன்அமர்ந்த அதே போராட்ட முறையில் ஒரு சாதாரண தாய்,ஒரு குடும்ப தலைவி அமர்ந்தபொழுதில் இந்த போராட்டத்தின் அனைத்திலும் சாதாரண வாழ்வுக்குள் வாழ்ந்துவரும்மக்கள் அனைவரும்இறங்கும் ஒரு தருணம் வெளிப்படையாக ஆரம்பித்தது.அதுவே நாட்டுப்பற்றாளர்கள் எனும் ஆயிரம் ஆயிரம் தேசத்தின் விடுதலைக்கான மனிதர்களைகளமிறக்கியது.

இந்த விடுதலைப்போராட்டத்தின் ஆரம்ப நாளில் இருந்தே இது தனித்து இதன்போராளிகளின் முயற்சியாக மட்டும் இருந்திருக்கவில்லை.இதற்கான போராளிகளை மறைத்து வைத்திருந்த ஆரம்பகால உதவியாளர்கள் முதல் ஏதோஒரு இரவில் தெரு முனையில் காத்திருந்து சைக்கிளில் வரும் போராளிகளுக்கு அடுத்ததெருவின் இருளுக்குள் சிங்களராணுவமோ இந்தியராணுவமோ காத்திருக்கிறான் என்றதகவலைதந்த அந்த முகமும் பெயரும் தெரியாத நாட்டுப்பற்றாளர்வரை அனைவரும் வணங்கத்தக்கவர்களே.நாட்டுப்பற்றாளர் என்பவர்கள் இந்த வரையறைக்குள் மட்டுமே அடங்குவர்என்றில்லாமல் இந்த விடுதலைப்போராட்டத்தின் அனைத்து மட்டங்களிலும் அனைத்துஉச்சகட்ட செயற்பாடுகளிலும்துணை நின்ற செயல்வீரர்கள் அவர்கள்.வீதிக்கு வீதி தடுப்புசோதனை நிகழும் எதிரி நகருக்குள் போராளியை அழைத்துசெல்வதில் இருந்து குளிர்உறைந்த புலம்பெயர் தேசத்து தெருக்களில் வீடுவீடாகஅலைந்து செயற்பட்டவர்கள்வரை நாட்டுப்பற்றாளர்களின் வீச்சு எழுதி முடியாதது.

இவர்கள் அனைவரும் தாம் வாழும் சாதாரண மனிதர்களின் வாழ்வுக்குள்ளாக வாழ்ந்துகொண்டே விடுதலையின் பாரத்தையும் சுமந்தவர்கள்.இந்த பணியின் முடிவும் இதன்போதுஏற்படும் பாதிப்புகளும் அறிந்தே வந்தவர்கள்.தமது இனத்தின் விடுதலைக்காக களமாடும் போராளிகளுக்கும் இந்தவிடுதலைஇயக்கத்துக்கும் உறுதுணையாக நின்று செயற்பட்ட பெரும் தூண்கள் இவர்கள்.நாட்டுப்பற்றாளர் மிகவும் செறிவானதும் மிகவும் ஆணித்தரமானதுமான ஒரு செய்தியையே தமதுவாழ்வினூடாக சொல்லிவிட்டு போயிருக்கிறார்கள்.எப்படி ஒரு சாதாரண குடும்பவாழ்வுக்குள் இருந்தபடியே விடுதலைக்காக தம்மால்இயன்றதையும் அதற்கும் மேலானதுமான செயற்பாட்டை செய்யலாம் என்பதே அவர்களின்செய்தி ஆகும்.

SHARE