நாட்டு மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்திய அரசாங்கம் தற்போது அதன் மூலமே அழிந்து வருகின்றது!

298

தேர்தலுக்கு முன்னர் நாட்டு மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்திய அரசாங்கம் தற்போது அதன் மூலமே அழிந்து வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவின் ‘பிரபஞ்சம்’ திட்டத்தின் கீழ் மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்திற்கு நேற்று (8) சனிக்கிழமை மதியம் வகுப்பறைகளுக்கு டிஜிட்டல் கணினி திரைகள் மற்றும் கணினி உபகரணங்களை எதிர்க்கட்சித் தலைவரினால் வழங்கி வைக்கப்பட்டது.இந் நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.இனவாதம், இன பேதம், மதவாதத்தை விதைத்தன் சாபத்தையே அரசாங்கம் இன்று அனுபவிக்கின்றது. ஊட்டச்சத்து குறைபாடும் போசாக்கின்மையும் தலைவிரித்தாடும் நாட்டில் உள்ள குழந்தைகளின் இணைய வழி கல்விக்கு தீர்வை வழங்க முடியாத அரசாங்கத்தால் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு எவ்வாறு தீர்வை வழங்க முடியும்.முன்னெப்போதையும் விட இந்நாட்களில் தேசிய ஊட்டச்சத்து கொள்கையின் தேவை மிகவும் உணரப்பட்டு வருகின்றது. ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் குறித்த கொள்கையின் தேவை நிறைவேற்றப்படும் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.

Gallery Gallery Gallery Gallery

SHARE