நான் துரோகி இல்லை: விஜய் 

470



‘நான் தியாகி இல்லை அதேபோல் துரோகியும் இல்லை என்றார் விஜய்.இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படம் ‘கத்தி. விஜய்-சமந்தா ஜோடி. அனிருத் இசை. இப்படத்தின் ஆடியோ சிடி, டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் விஜய் பேசியதாவது:கத்தி படம் எனக்கும், இயக்குனர் முருகதாஸுக்கும் மிகமுக்கியமான படம். பொதுவாக என் படத்தை பற்றி நான் பெரிதாக சொல்வது கிடையாது. கத்தி படம் எடுத்தது யாருடனும் சண்டை போடுவதற்காக இல்லை. எல்லா தரப்பு மக்களும் சண்டை சச்சரவுகளை மறந்து நிம்மதியாக சந்தோஷமாக ரசித்து பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான். எந்த மக்களுக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ இந்த படத்தை நான் கொடுக்கவில்லை. நான் தியாகி இல்லை. அதேபோல் துரோகியும் கிடையாது. உண்மைக்கு விளக்கம் கொடுத்தால் தெளிவாகும். வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்தால் உண்மையாகிவிடும்.இவ்வாறு விஜய் பேசினார்.இப்படத்தை வெளியிட சில தமிழ் அமைப்பினர் எதிர்ப்பு குரல் எழுப்பி வருகின்றனர். இதையடுத்து விழா நடந்த பகுதியில் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தினர். பட்டினப்பாக்கம் போலீசார் போராட்டம் நடத்திய 172 பேரை கைது செய்தனர்.

 

SHARE