நாய் , மாடு துரத்தி பார்திருப்பிர்கள்!! இங்கு நெருப்பு கோழி எப்படி விரட்டுது பாருங்க!!

386

 

 

சைக்கிளில் செல்பவர்களை நாய் துரத்தியது, மாடு துரத்தியது என்ற செய்திகளை கேட்டு உள்ளோம். ஆனால் இதில் புதுமையாக சைக்கிள் பந்தைய வீரர்களை நெருப்பு கோழி விரட்டியது! என்ற வியப்பும், ஆர்வமும் நிறைந்த வீடியோவானது வெளியாகி உள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கடற்கரை ஒட்டிய ஆள் அதிகமாக நடமாட்டம் காணப்படாத சாலையில் சைக்கிள் பந்தைய வீரர் ஒலிக்சி மிஸ்சென்கோ பயிற்சியில் ஈடுபட்டு உள்ளார், அவருடைய நண்பரும் ஆர்வமாக சைக்கிள் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர். அப்போது பயிற்சியில் அழைக்கப்படாத போராட்டியாளராக நெருப்பு கோழி களமிறங்கி, அவர்களை பதறசெய்து உள்ளது.

இது தொடர்பான வீடியோவை சைக்கிள் பந்தைய வீரர் ஒலிக்சி மிஸ்சென்கோ யூ டியூப் இணைய தளத்தில் வெளியிட்டு எனது தோழியை மிகவும் ஈர்க்கும் என்று குறிப்பிட்டு உள்ளார்.

சாலையில் அவர்கள் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தபோது, திடீரென சாலையில் ஓரத்தில் இருந்து வந்த நெருப்பு கோழி பின்தொடர்ந்தது.

தனக்கு பின்னால் வந்த அவரது நண்பரை நெருப்பு கோழி வேகமாக பின்தொடர்ந்ததை ஒலிக்சி மிஸ்சென்கோவிற்கு தெரியவந்து உள்ளது. இதனையடுத்து இருவரும் சைக்கிளை வேகமாக செலுத்திஉள்ளனர். நெருப்பு கோழியும் சலைக்காமல் பின்தொர்ந்தது. நெருப்பு கோழியை கண்டு பயந்து இருவரும் சைக்கிளை வேகமாக ஓட்டினர்.

அவர்களது வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லையோ என்னவோ ஒரு கட்டத்தில் நெருப்புக் கோழி நானே விலகிக் கொள்கின்றேன்பா என்று காட்டுப்பகுதிக்கு சென்றுவிட்டது.

 

SHARE