நாளைய இளம் தலைவராக இந்திய இளைஞரை கவுரவப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

418
உலகில் மாற்றங்களை கொண்டு வரும் முயற்சியில் ஈடுபடும் இளைஞர்களின் ஆற்றலை இனங்கண்டு, ‘யங் லீடர் ஆப் டுமாரோ’ (நாளைய இளம் தலைவர்) என்ற பட்டியலில் அவர்களின் பெயர்களை பிரபல அமெரிக்க பத்திரிகையான, ‘டைம்ஸ்’  வெளியிட்டு வருகின்றது.

இவ்வாண்டு வெளியிடப்பட்ட இப்பட்டியலில் அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில், ‘ஆர்கிடெக்ட்’ (கட்டுமானத்துறை) பட்டம் பெற்றுள்ள இந்திய இளைஞரான அலோக் ஷெட்டியின் பெயர் இடம்பெற்றுள்ளது.

மழை, வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் குடிசைப் பகுதி மக்கள் பயனடையத்தக்க வகையில் மரத்தினால் செய்யப்பட்ட வீடுகளை அலோக் ஷெட்டி(28) வடிவமைத்துள்ளார்.

மூங்கில் மற்றும் மரத்தால் செய்யப்பட்ட இந்த வீடுகளை ஓரிடத்திலிருந்து இடம் பெயர்த்து கொண்டு சென்று, வேறொரு இடத்தில் அமைக்க முடியும். இவற்றை கழற்றி, மாட்டுவதும் மிகவும் எளிது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏழை மக்களின் நலன் கருதி, வெறும் 18 ஆயிரம் ரூபாய் செலவில் இந்த வீடுகளை தயாரித்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ள இவரது இந்த அரும் கண்டுபிடிப்பை பாராட்டியுள்ள டைம்ஸ் பத்திரிகை, ‘நாளைய இளம் தலைவர்கள்’ பட்டியலில் அலோக் ஷெட்டியின் பெயரை இடம் பெறச்செய்து கவுரவித்துள்ளது.

SHARE