நாளை இலங்கையின் ஆட்சியாளர்கள் 77 வது சுதந்திர தினம்

45

#நாளை இலங்கையின் ஆட்சியாளர்கள் 77 வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறார்கள்…..
#ஆனால் ஆட்சியாளர்கள் எவரும் இந்த 77 வருட காலத்தில் சுயமாக எந்தவொரு பொருளையும் உற்பத்தி செய்ய முயிற்சிக்கவில்லை….
#மாறாக இறக்குமதி செய்வதிலே எம் ஆட்ச்சியாளர்கள் குறியாக இருந்தார்கள்….
#நான்கு பக்கமும் கடலால் சூழ்நித்திருக்கும் நாட்டில் கேவலம் உப்பை கூட அடுத்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள்…..
#ஆனால் எது என்னவோ நம் ஆட்ச்சியாளர்கள் கடன் வாங்குவத்தில் மட்டும் நன்கு தேர்ச்சிசி பெற்றவர்கள்…..
#இலங்கை இதுவரை  17 தடவை சர்வதேச நாணய நிதியத்திடம் மட்டும் கடன் வாங்கி இருக்கின்றது…. 
#குறிப்பாக பொருளாதார நிபுணராக போற்றப்படும் திரு ரணில் விக்கிரமசிங்கே கடந்த காலங்களில் அதிகாரத்தில் இருந்த போது மட்டும் 5 தடவைகள் கடன் வாங்கி இருக்கின்றார்…
#அதே போல் அனைத்து ஆட்ச்சியாளர்களும் சலித்தவர்கள் இல்லை….
#ஆட்சியாளர்கள் மாறி மாறி அதிகாரத்திற்கு வருகின்ற போதும் மாறி மாறி கடன்களை பெறுகின்ற போதும் தொடர்ந்து இலங்கை வீழ்ச்சியடைகிறது என்பதே உண்மை…..
#எந்த முன்னற்றமும் இன்றி பொருளாதாரம் தொடர்ச்சியாக சீரழிந்து கொண்டிருக்கும் நிலையில்….
#இன்று நாங்கள் கடன் வாங்குவதை சாதனைகளாக கொண்டாடி கொண்டிருக்கும் நிலையில்….
#எமது கடந்த 30 வருட ஆயுத போராடடத்தில்…..
#தனி ஒருவராக வழி நடத்தி….
#எந்தவொரு நாட்டிடமும் கடன் கேட்டு கையெந்தாமல்….
தங்களுக்கு தேவையான ஆயுத தளபடமாக இருக்கட்டும்….
வாகனங்களாக இருக்கட்டும்….
படகுகள் கப்பல்களாக இருக்கட்டும்…
போர் விமானகளாக இருக்கட்டும்….
#முடிந்தவரை அடுத்த நாட்டிடம் தங்கிருக்காமல் தாங்களே உற்பத்தி செய்து அதில் வெற்றியும் கண்டிருந்தார்கள்….
#உப்புக்கு கூட அடுத்த நாட்டில் கையெந்தும் சிங்கள அரசாங்கம் எங்கே…..
#போர் விமானத்தையே தாயாரித்து அதில் வெற்றியும் கண்ட மேதகு எங்கே…..
உண்மையில் போரின் இறுதியிலாவது இலங்கை அரசாங்கம் விடுதலை புலிகளின் திறமைகளை உணர்ந்து…
தோல்வியில் இருந்தவர்களை அரவணைத்து அவர்களின் திறமைகளை பயன்படுத்தி இலங்கையை முன்னேற்றி இருக்கலாம்….
இப்படி திறமையான ஒரு அமைப்பை அழித்துவிட்டு அதை யுத்த வெற்றி என்று கொண்டாடும் நாடு…
ஒரு போதும் முன்னேற இடமில்லை….
ஒரு சிறிய உதாரணம் ஒன்றுடன் பதிவை நிறைவு செய்கிறேன்….
அமெரிக்கா ஹிட்லரின் வீழ்ச்சிசிக்கு பின் அங்கு சென்று அணுகுண்டு, சக்தி வாய்ந்த ஆயுதங்களை தயாரித்த விஞ்ஞானிகளை தேடி தேடி கண்டு பிடித்து பாதுகாப்பாக தங்களது நாட்டுக்கு கொன்று சென்று அவர்கள் மூலமாக இன்று உலத்தின் முதலாவது வல்லரசாக திகழ்கின்றர்கள்…..
ஆனால் இலங்கை சொந்த நாட்டுக்குள் இருந்த திறமையாளர்களை அழித்துவிட்டு அதை வெற்றி என்று கொண்டாடி வருகிறது….
#சோலையூர்_காண்டீபன்.
SHARE