நிசான் ஜிடிஆர் ரக வாகனத்தின் இலங்கை பெறுமதி 60 மில்லியனிற்கும் அதிகம் என தெரியவருகின்றது,

324

 

கடந்த ஜனவரியில் கெஸ்பாவையில் உள்ள வர்த்தகர் ஓருவரின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கார்பந்தயங்களில் பயன்படுத்தப்படும் கார் குறித்த புதிய விபரங்களும், அது தொடர்பான விசாரணைகளை முடக்குவதற்கு நடைபெறும் முயற்சிகள் குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது

குறிப்பிட்ட காரை முன்னாள் ஜனாதிபதியின் இளைய மகனே பயன்படுத்தி வந்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் கனத்தை சுற்றுவட்டத்தில் இடம்பெற்ற விபத்தில் இந்த காரை பயன்படுத்தியவர்களுக்கு தொடர்பு இருந்தபோதிலும் இது குறித்து எவ்வித விசாரணைகளும் இடம்பெறவில்லை.

குறிப்பிட்ட காரின் இலக்கத்தகடுகளில் காணப்பட்ட இலக்கங்கள் போலியானவை என்பது தெரியவந்துள்ளது.

குறிப்பிட்ட காரின் இலக்கதகடுகளில் காணப்பட்ட இலக்கங்கள் உள்ள பென்ஸ் ரக வாகனத்தை உண்மையில் பயன்படுத்துபவர் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி செயலகம் இதனை உறுதிசெய்துள்ளது.

குறிப்பிட்ட

தற்போது குறிப்பிட்ட வாகனம் கெஸ்பாவ நீதிமன்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றம் குறித்த வழக்கு தொடர்பாக சட்ட – மா – அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையை கோரியுள்ள போதிலும், சட்டமா அதிபர் திணைக்களம் இன்னமும் உரிய பதிலை வழங்கவில்லை.

இதேவேளை இலங்கை ஜனாதிபதியின் வாகனத்திற்கு பயன்படுத்தப்படும் இலக்கத்தகட்டு இலக்கத்தினை கொண்ட இந்த வாகனம் தன்னுடையது என நபர் ஓருவர் தற்போது உரிமை கோரியுள்ளார்.

இவர் இலங்கையின் பிரபலமான வாகன உதிரிப்பாக இறக்குமதியாளர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை இலங்கை ஜனாதிபதியின் வாகனத்தகட்டு இலக்கம் எவ்வாறு முன்னாள் ஜனாதிபதியின் மகனால் பயன்படுத்தப்பட்ட வாகனத்தில் காணப்பட்டது என்ற விடயம் அரசியல்வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது ஜனாதிபதியின் பாதுகாப்புடன் தொடர்புடைய விடயம்,எனசுட்டிக்காட்டப்பட்டுள்ள

SHARE