நிதி உதவிகளை ரத்து செய்வதன் மூலம் எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை – ஆனந்தசங்கரி

687

பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கான நிதி உதவிகளை ரத்து செய்யக் கூடாது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி கனேடிய அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

நிதி உதவிகளை ரத்து செய்வதன் மூலம் எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக யாருக்காக நிதி உதவிகளை ரத்து செய்யப்படுகின்றதோ அவர்களுக்கு இந்த நிதி உதவி ரத்து மேலும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கனடா இலங்கைக்கு பாரியளவில் உதவிகளை வழங்கியுள்ளதாகவும்இ கட்டுநாயக்க விமான நிலையம் போன்றவற்றின் உருவாக்கத்திற்கு கனடாவின் பங்களிப்பு அளப்பரியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டின் முக்கியத்துவத்தை உள்நாட்டு தமிழ் அரசியல் தலைவர்களும்இ புலம்பெயர் தமிழர்களும் சரியாக புரிந்துகொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளாh.

அமர்வுகளை சரியான முறையில் பயன்படுத்தி தமிழர் பிரச்சினைகளை உலகிற்கு எடுத்துரைத்திருக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

கனேடிய பிரதமரும்இ இந்திய பிரதமரும் அமர்வுகளில் பங்கேற்று இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்காக பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனைப் போன்று குரல் கொடுத்திருந்தால்இ அது இன்னமும் அர்த்தபூர்வமானதாக அமைந்திருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனித உரிமை நிலைமைகளை காரணம் காட்டி அமர்வுகளை நிராகரிப்பதனை விடவும் அமர்வுகளில் அதற்காக குரல் கொடுப்பது காத்திரமானது என அவர் தெரிவித்துள்ளார்.

SHARE