நியமனங் கடிதங்களை வழங்கி வைத்த மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரட்ன

198

மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரட்ன இன்று பட்டதாரிகள் மற்றும் இரண்டு வருட டிப்ளமோ பாட கற்கைநெறியை பூர்த்தி செய்த 200 ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வு மத்திய மாகாண ஆளுநர் காரியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைத்து உரையாற்றிய மத்திய  மாகாண ஆளுநர்,

இன்று 200 ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இவ்வேலைத்திட்டத்தை நான் ஆளுநராக நியமித்த போது ஆரம்பித்த ஒன்றாக இருந்தாலும் இப்போது நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. இந் நியமனம் பெற்றவுடன் நகர்ப்புற பாடசாலை மாற்றம் பெற்று கொள்ள முடியும் என்ற எண்ணத்தை இப்போதே மறந்து விடுங்கள் என கூறியதோடு இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்க காரணம் மத்திய மாகாண கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கிலே தான் இந்நியமனம் வழங்கப்பட்டது. இவ்வளர்ச்சியானது பின்தங்கிய நிலையில் உள்ள கிராம பாடசாலைகளில் இருந்து ஆரம்பிக்க வேண்டிய ஒன்றாகும்.

ஆகவே நியமனம் பெற்ற பின்னர் தூரத்தை எண்ணாமல் நமது சமூகம் வளர்ச்சி பெற எம்மால் முடிந்த பங்களிப்பை வழங்குவோம் என எண்ணி கடமையை சிறப்பாக செயல்பட வேண்டும் என்றார்.

SHARE