நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சியான தேசிய கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்து கொண்டுள்ளது.
49 சதவிகித வாக்குகளை அள்ளிய ஆளுங்கட்சி மிகப்பெரிய முன்னிலை பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. தங்கள் கூட்டணியில் உள்ள மூன்று சிறிய கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க ஜான் கீ முடிவெடுத்துள்ளார். மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ள ஜான் கீக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் இணையதளத்தில் இன்று டுவிட் செய்துள்ளார்.