இதில் தென்ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் குயின்டான் டீ காக் 5 கேட்ச் மற்றும் ஒரு ஸ்டம்பிங் செய்தார். இதன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக பேரை (6 வீரர்கள்) ஆட்டம் இழக்கச் செய்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை சமன் செய்தார். இதற்கு முன்பு 8 விக்கெட் கீப்பர்கள் இதே போல் ஒரு இன்னிங்சில் அதிகபட்சமாக 6 பேரை வெளியேற்றி இருக்கிறார்கள். 21 வயதான டீ காக் விக்கெட் கீப்பராக பணியாற்றிய தனது 27–வது ஒரு நாள் போட்டியிலேயே 50 பேரை அவுட் ஆக்கியதில் பங்களிப்பை அளித்துள்ளார். ஒரு விக்கெட் கீப்பராக குறைந்த போட்டியில் 50 பேரை ஆட்டம் இழக்கச் செய்த விக்கெட் கீப்பர் என்ற சிறப்பும் அவருக்கு கிடைத்துள்ளது.
பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 48.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 236 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் டிவில்லியர்ஸ் 89 ரன்னுடனும், டுமினி 52 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர். 2–வது ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் வருகிற 24–ந் திகதி நடக்கிறது