நிறைய குழந்தைகள் பெத்துக்கணும்.. கண்கலங்கி பேசிய விஜய் டிவி பிரியங்கா

82

 

தொகுப்பாளினி பிரியங்காவிற்கு அறிமுகமே தேவையில்லை. சின்னத்திரையின் மூலம் நம் அனைவரின் மனதையும் கொள்ளைகொண்டவர் ஆவார்.

இதுவரை மகிழ்ச்சியான பிரியங்காவை மட்டுமே நாம் பார்த்திருக்கிறோம். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரியங்கா, தனது சோகமான பக்கத்தை பற்றியும் பேசினார்.

காதலுக்காக ஏங்கும் பிரியங்கா
இதில், தனது தம்பியின் மகள் தான் தன்னுடைய உலகம் என்றும். தங்கள் குடும்பத்தை ஒட்டுமொத்தமாக மாற்றியதே அவள் தான் என்றும் கூறி கண்கலங்கினார். அவள் அம்புக்காக தான் நான் ஏங்குகிறேன், அது போன்ற காதலை மட்டும் எனக்கு தாருங்கள். மற்ற அனைத்தையும் நான் தருகிறேன், வேறு எதுவுமே எனக்கு வேண்டாம். அவளுக்காக நான் எதுவேண்டுமானாலும் செய்வேன், அத்தை எனும் உறவை தாண்டி அவள் மீது அதிக அன்பு வைத்து இருக்கிறேன்” என கூறினார் பிரியங்கா.

நிறைய குழந்தைகள் பெத்துக்கணும்
இதன்பின் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி அர்ச்சனா “நீ நினைத்தபடி உன்னை உருகி உருகி காதலிக்கும் ஒருத்தர் உன் வாழ்க்கையில் நிச்சயம் வருவார்” என கூறினார். பின் ” நீ நிறைய குழந்தையை பெற்றுக்கொள்ள வேண்டும் இதற்கான நான் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன். உன் மகன், உன் மகளை நான் பார்க்க வேண்டும்” என அர்ச்சனா சொன்னவுடன், கண்கலங்கி அழுதார் பிரியங்கா.

முதல் முறையாக அன்புக்காக ஏங்கி பிரியங்கா பேசிய இந்த விஷயம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சிரித்து நகைச்சுவையாக மட்டுமே பேசும் பிரியங்காவிற்கு இப்படியொரு ஒரு பக்கம் இருக்கிறதா என ரசிகர்கள் பலரும் ஷாக்காகியுள்ளனர்.

SHARE