நிலவுக்கு செல்ல தயாராகும் அவுடி (Audi) நிறுவனத்தின் தயாரிப்பு!

274

உலகின் முன்னணி கார் வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான Audi ஆனது விண்வெளியிலும் காலடி வைக்க தயாராகிவிட்டது.

இதற்காக Audi Lunar Quattro Rover எனும் விண்கல வடிவமைப்பில் ஈடுபட்டு வந்தது.

தற்போது இதன் வடிவமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் சந்திரனை நோக்கி பயணிக்கவுள்ளது.

ஜேர்மன் நாட்டு விஞ்ஞானிகள் குழு ஒன்றுடன் இணைந்து இவ் விண்கல வடிவமைப்பினை 2015ம் ஆண்டின் பிற்பகுதியில் Audi நிறுவனம் மேற்கொண்டிருந்தது.

இவ் விண்கலத்தில் அதிகளவான பாகங்கள் 3டி பிரிண்டிங் முறையில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ளன.

மிகுந்த ஸ்திரத்தன்மை கொண்டதாக குறித்த விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சந்திரனில் பயணிக்கும்போது தடம்புரளாமல் இருப்பதற்கு உதவும்.

மேலும் இதன் சில்லுகள் ஆரம்பத்தில் 38 கிலோகிராம் நிறை கொண்டதாக இருந்த போதிலும் சில மாற்றங்களின் ஊடாக 30 கிலோகிராமாக குறைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேறும் பட்சத்தில் Audi நிறுவனத்தின் புகழ் இன்னும் உச்சத்திற்கு செல்லும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

SHARE