நீங்களும் மார்க் ஜீக்கர்பெக் ஆகலாம்! அவரே சொல்லும் ரகசியங்கள்

212

625-500-560-350-160-300-053-800-748-160-70-4

இன்று பேஸ்புக்கில் இல்லாத பேஸ்களே இல்லை என்ற அளவுக்கு சமூகவலைதளமான பேஸ்புக்கின் ஆதிக்கம் உலகம் முழுவதும் பரவி கிடக்கிறது.

இதன் நிறுவன தலைவர் Mark Zuckerbergன் பிரம்மாண்ட வெற்றி சாதாரணமாக அவருக்கு கிடைத்ததல்ல! அதற்கு பின்னால் அவரின் மிக பெரிய உழைப்பு உள்ளது.

வெற்றிகளுக்கான வழிகள் பற்றி Mark Zuckerberg யே கூறுகிறார்,

எந்த ஒரு காரியத்தை நாம் எடுத்தாலும் அதில் நமது முயற்சி எந்தளவுக்கு இருக்கிறது என்பதே அதன் வெற்றியை தீர்மானிக்கிறது.

அந்த காரியத்துக்காக நாம் அதிக சிரத்தை எடுத்து முயற்சி எடுக்கும் போது அந்த காரியத்தின் வெற்றி பிரமாண்டமாக ஆகிறது என Mark கூறுகிறார்.

எந்த ஒரு செயல் விடயத்திலும் அடுத்தவர்களின் கருத்தை காது கொடுத்து கேட்க வேண்டும். Mark தனது அலுவுலகத்தில் வேலை செய்பவர்களிடம் வாரம் ஒரு நாள் வேலை விடயத்தை பற்றி அவர்கள் கருத்துகளை தாராளமாக கூற தனி நேரத்தையே ஒதுக்கி வைத்துள்ளார்.

தவறு செய்வது மனித இயல்பு . ஆனால் நாம் செய்யும் தவறுகளிலிருந்து நிச்சயம் நாம் பாடம் கற்க வேண்டும் என்கிறார் Mark.

தான் செய்யும் தொழிலால் உலகத்துக்கு ஏதேனும் மாற்றம் கொண்டு வருபவனே உண்மையான வெற்றியாளன் என்கிறார் Mark.

தன் சுயநலத்துக்காக வாழ்பவன் வாழ்க்கையில் எதையும் நீண்டநாள் சாதிக்க முடியாது என்பது இவரின் எண்ணம்!

நிச்சயம் எல்லோரிடமும் கற்க ஏதாவது ஒரு புதிய விடயம் இருக்கும். நம்மை சுற்றி இருப்பவர்களிடம் இருக்கும் நல்ல விடயங்களை நாம் கற்க வேண்டியது அவசியம்.

ஒரு கை தட்டினால் ஓசை வராது. அது போல ஒரு வேலையோ, தொழிலோ சிறப்பானதாக அமைய நல்ல ஒரு கூட்டான அணியை நாம் அமைத்து கொள்ள வேண்டும்.

வாடிக்கையாளர்கள் தான் எப்போதும் ராஜாக்கள். அவர்கள் மகிழ்ச்சியடையும் விதத்தில் தான் நாம் தொழில் முறைகள் இருக்க வேண்டும்.

என் பேஸ்புக்கின் எல்லா அம்சங்களும் வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சி மற்றும் திருப்தியை நோக்கியே பயணிக்கிறது என்கிறார் இந்த சாதனை நாயகன்.

சமூகத்துடன் எப்போதும் நன்றாக பழக வேண்டும். பேஸ்புக் உருவாக என்னுடன் அதிகம் பழகிய என் கல்லூரி நண்பர்களும் மிக முக்கிய காரணம் என்கிறார் Mark.

நாம் Markன் வெற்றிகான சொற்களை பின்பற்றினால் நமது வாழ்க்கையிலும் வெற்றி உறுதி!

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

SHARE