நீங்கள் உளவுபார்க்கப்படுகிறீர்களா? அறியத்தரும் புதிய போன் கவர்

233

625.500.560.350.160.300.053.800.748.160.70 (7)

அண்மையில், தொலைபேசி உணரி மூலம் தகவல்கள் பரிமாறப்படுவதை உங்களுக்கு எச்சரிக்கும் புதியவகை தொலைபேசி கேஸ் (கவர்) ஒன்றை தொழில்நுட்பவியளாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இது ‘kill switch’ உருக்களை கொண்டுள்ளதால், நீங்கள் இன்னொருவரால் உளவு பார்க்கப்படும் போது உடனடியாகவே செயற்பாடற்ற நிலைக்கு மாற்றக் கூடியதான வசதிகளைக் கொண்டுள்ளது.

இதற்கான முன்மாதிரியே தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் அதன் உண்மையான தொழிற்பாடு பற்றி தற்போது தெளிவாக கூறமுடியாது.

இது தொலைபேசியிலிருந்து பிறப்பிக்கப்படும் மின் சமிக்கைகளை கண்காணிக்கக்கூடியது.

அதாவது Cellular, Bluetooth, Wi-Fi அல்லது Radio connections களிலிருந்து வரும் சமிக்கைகளை கண்காணித்து எச்சரிக்கை தருகின்றது.

இது தொலைபேசியின் வன்பொருளுடன் SIM-card slot மூலமாக தொடர்பு கொள்கிறது.

இதனால் SIM-card ஆனது தொலைபேசி கேஸினுடாகவே செலுத்த வேண்டும்.

இது iPhone 6 இனை அடிப்படையாக வைத்தே உருவாக்கப்பட்டுள்ளது. ஆயினும் இது எல்லா வகையான smartphone களுக்கும் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

SHARE