வெளிநாட்டில் தோழிகளுடன் நீச்சல் உடையில் எமி ஜாக்ஸன் கும்மாளம் போட்டார்.‘மதராச பட்டினம் படத்தில் நடித்தவர் இங்கிலாந்து நடிகை எமி ஜாக்ஸன். பட வாய்ப்புகள் குறைந்த எண்ணிக்கையிலேயே வந்தது. கடந்த 4 வருடத்தில் மொத்தம் 4 படங்கள் மட்டுமே நடித்திருக்கிறார். இதில் தமிழில் ‘தாண்டவம் மற்றும் தெலுங்கு, இந்தியில் தலா ஒரு படம் நடித்திருக்கிறார். தற்போது ‘ஐ படத்தில் நடிக்கிறார். ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அவர் தோழிகளுடன் ஊர் சுற்றுகிறார். சமீபத்தில் ஸ்பெயின் நாட்டுக்கு தோழிகளுடன் சென்றார். அங்குள்ள இபெசா கடற்கரையில் டூபீஸ் நீச்சல் உடை அணிந்து உல்லாசமாக படகு சவாரி செய்தார். இந்தியில் ‘ஏக் தீவானா தா (விண்ணைத்தாண்டி வருவாயா ரீமேக்) என்ற படத்தில் நடித்தபோது அதில் ஹீரோவாக நடித்த பிரதீக்கை காதலித்தார். அவரது பெயரை கையில் பச்சை குத்திக்கொண்டார். அதேபோல் பிரதீக்கும் எமி ஜாக்ஸன் பெயரை பச்சை குத்திக்கொண்டார். ஆனால் இந்த காதல் ஒரு வருட இடைவெளியிலேயே முறிந்துபோனது