சம காலத்தில் மொபைல் சாதனங்கள் உட்பட பல்வேறு சாதனங்களிலும் இலித்தியம் அயன் மின்கலங்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சோடியம் அயனைக் கொண்ட மின்கலத்தினை பிரான்ஸிலுள்ள விஞ்ஞானிகள் குழு ஒன்று முதன் முறையாக உருவாக்கியுள்ளது.
இதனை லேப்டொப்களிலும், LED Flash மின்கலங்களை ஒளிர வைப்பதற்கும், Tesla Model S கார்களிலும் பயன்படுத்தக்கூடிய மின்கல மாதிரியினை ஒத்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இதனை மீண்டும் மீண்டும் சார்ஜ் செய்து பாவனை செய்யக்கூடியதாகவும், இவ்வாறு சார்ஜ் செய்யும்போது ஒரு எலக்ட்ரோட்டிலுள்ள அயன்கள் மற்றைய எலக்ட்ரோட்டிற்கு திரவம் ஒன்றின் ஊடாக பயணம் செய்யக்கூடியதாகவும் இருக்கின்றது.