நீடித்து உழைக்கும் மின்கலத்துடன் Asus ZenFone Max அறிமுகம்

368
Asus நிறுவனமாது ZenFone Max எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.இக் கைப்பேசியானது ஒரு முறை சார்ஜ் செய்து நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் 5,000 mAh மின்சக்தியை வழங்கக்கூடிய மின்கலத்தினை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.மேலும் 5.5 அங்குல அளவுடைய Gorilla Glass 4 தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், Snapdragon 410 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM என்பவற்றினை உள்ளடக்கியுள்ளது.

இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.

எதிர்வரும் அக்டோபர் மாதமளவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இக் கைப்பேசியின் விலை தொடர்பான மேலதிக தவல்கள் வெளியிடப்படவில்லை.

SHARE