அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சம்சுங் நிறுவனத்துடன் இணைந்து நீண்ட ஆயுட்காலம் மற்றும் அதிக வினைத்திறன் கொண்ட மின்கலங்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.இம் மின்கலங்கள் மில்லியன் கணக்கான தடவைகள் மீண்டும் மீண்டும் சார்ஜ் செய்யக்கூடிய வகையிலும், தற்போதுள்ள மின்கலங்களை விட 30 சதவீதம் அதிக சக்தியினை வெளியிடக்கூடிய வகையிலும் வடிவமைக்கப்படவுள்ளது.மேலும் இவற்றில் Lithium, Germanium, Phosphorus, மற்றும் Sulphur ஆகியவற்றினால் ஆன Superionic Lithium-Ion குறை கடத்திகள் பயன்படுத்தப்படவுள்ளன.தவிர இம் மின்கலங்கள் 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலேயே சிறந்த செயற்பாடுடையதாகக் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
|