”சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, ஏறத்தாழ 1,000 பக்கங்களை நெருங்கி வரும் தீர்ப்பை எழுதி முடித்துவிட்டார் என்றே சொல்கிறார்கள். 1,000 பக்கங்கள் என்றால், அரசுத் தரப்பு வாதம் மற்றும் எதிர்தரப்பு வாதத்தை அப்படியே எடுத்துக்கொண்டு அதற்குக் கீழ், நீதிபதி தன்னுடைய தீர்ப்பை எழுதுவார். இதைத்தான் ‘ஆபரேஷன் போர்ஷன்’ என்பார்கள். தன்னுடைய லேப்டாப்பில் தானே அவற்றை டைப் செய்துள்ள நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா இதற்காக ஸ்டெனோவைக்கூட அமர்த்திக் கொள்ளவில்லை. அந்த நான்கு நாட்களும் உணவு, தண்ணீர் தவிர வேறு எதற்காகவும் யாரையும் நீதிபதி சந்திக்கவில்லை.