பார்க்கும் போது அழகிய கடல் போன்றே காட்சியளிக்கும், ஆனால் கடல் இல்லை, பெரிய ஏரி.இந்த ஏரியில் மனிதர்கள் மிதப்பார்கள், நீச்சல் தெரியாதவர்கள் கூட அழகாக படுத்துக் கொண்டே புத்தகங்கள் படிக்கலாம்.எப்படி இது சாத்தியமாகும் என நினைக்குறீர்களா? உலகத்திலேயே அடர்த்தி மிகுந்த உப்பு நீர் இருப்பதே இதற்கு காரணம்.இஸ்ரேல்- ஜோர்டான் எல்லையில் மத்திய தரைக்கடலுடன் சேர்ந்திருக்கும் நீர்ப்பரப்பு தான் சாக்கடல்.உலகிலேயே பள்ளமான பகுதி இதுவாகும், கடல் மட்டத்தில் இருந்து 378 மீட்டர் அதாவது 1340 அடி ஆழமானது.
சாதாரண கடல் நீரைவிட ஏழு அல்லது எட்டு மடங்கு அதிகமான உப்பும் மற்ற உப்புப் பொருட்களும் சாக்கடல் நீரில் கலந்திருக்கின்றன. அதற்காக எந்த உயிரினமும் இதில் வாழவில்லை என நினைக்க வேண்டாம். உப்பை உணவாக உட்கொள்கின்ற ஏராளமான நுண்ணுயிர்கள் இங்கு வாழ்கின்றனர். எடுத்துக்காட்டாக ஹாலோ பாக்டீரியம், ஹாலோபியம் என்ற நுண்ணுயிர்களை குறிப்பிடலாம். அதுமட்டுமின்றி பொட்டாசியம், மக்னீசியம், புரோமைடுகள் ஆகியவை பெரிய அளவில் இங்கு அடங்கியிருக்கின்றன. இதன் நீர் மற்றும் சேற்றில் கலந்துள்ள மருத்துவ குணங்கள் தோல் நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது. இதனாலேயே இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் சேற்றை எடுத்து உடல் முழுவதும் பூசிக் கொள்கின்றனர். எகிப்தில் ஆயிரம் ஆண்டுகளாக மம்மிக்கள் கெட்டுப் போகாமல் இருக்க காரணம் சாக்கடலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வகைப் பொருள்கள் தான் என கூறப்படுகிறது. இத்தனை சிறப்பம்சங்கள் கொண்ட சாக்கடலில் பரப்பு குறைந்து கொண்டே வருவது கவலை தரும் விடயமாகும். |