காலிபிளவர் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாக உள்ளது.காலிபிளவரில் உள்ள சத்துக்கள்காலிபிளவரில் பொட்டாசியம், விட்டமின் B6 ஆகியவை உள்ளன. இதில் விட்டமின் சி மிக அதிகமாக உள்ளது.ஒரு கப் நறுக்கிய பூவில் கலோரி 24 கிராம், புரதம் 2 கிராம், மாவுச்சத்து 5 கிராம், விட்டமின் சி 72 மில்லி கிராம், ஃபோலாசின் 66 மைக்ரோ கிராம், பொட்டாசியம் 355 மில்லி கிராம் அடங்கியுள்ளது.
மருத்துவ பயன்கள்
இந்த காய்கறியை அதிகமாக வேக வைக்க கூடாது. இல்லையெனில் சத்துக்கள் கரைந்துவிடும்.
மேலும் காலிபிளவர் கொழுப்பு சத்து இல்லாத காய்கறி. குறைந்த கலோரிகள் கொண்டது. இதனால் இதயநோய்க்கு இதமான காய்கறி இது.
காலிபிளவருக்கு புற்று நோயை தடுக்கும் சக்தி உள்ளது.பூ வேகும் போது Isothiocyantes என்னும் ரசாயனம் வெளிவருகிறது.
இது உடலினுள் சென்று உடல் தானாக உற்பத்தி செய்யும் phase II என்ற புற்றுநோய் தடுக்கும் பொருளை அதிகமாக சுரக்கச் செய்கிறது.
இது இடுப்பில் ஏற்படும் கருப்பு தழும்புகளை போக்கவல்லது என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் காலிப்ளவர் கொழுப்பு சத்து இல்லாத காய்கறி. குறைந்த கலோரிகள் கொண்டது. இதனால் இதயநோய்க்கு இதமான காய்கறி இது. காலிப்ளவருக்கு புற்று நோயை தடுக்கும் சக்தி உள்ளது.
பூ வேகும் போது Isothiocyantes என்னும் ரசாயனம் வெளிவருகிறது. இது உடலினுள் சென்று உடல் தானாக உற்பத்தி செய்யும் phase II என்ற புற்றுநோய் தடுக்கும் பொருளை அதிகமாக சுரக்கச் செய்கிறது.
இது இடுப்பில் ஏற்படும் கருப்பு தழும்புகளை போக்கவல்லது என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
கால்சியம் சத்து அதிகம் கொண்ட காலிபிளவர் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவாக உள்ளது.
மேலும், அதிக எடை போடாமல் இருக்க உதவுகிறது. இதோ அந்த காலிபிளவரில் சப்பாத்தி செய்து சாப்பிடலாம்.
காலிபிளவர் சப்பாத்தி
* காலிபிளவரை நன்றாக கழுவி நறுக்கி கொள்ளவும்.
* பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கவும்.
* துருவிய காலிபிளவர், பச்சைமிளகாய், சீரகம், உப்பு, மஞ்சள்தூள் ஆகியனவற்றைக் கோதுமை மாவுடன் சேர்த்துக் கைகளால் கிளறி சுடுதண்ணீரைச் சேர்த்து மாவை நன்கு பிசைந்து கொள்ளவும்.
* இதனுடன் நறுக்கிய கொத்தமல்லியையும் சிறிது எலுமிச்சைச் சாற்றையும் சேர்த்து மீண்டும் பிசைந்து அரை மணிநேரம் ஊற வைக்கவும்.
* பிறகு உருண்டைகளாக்கி சப்பாத்தி வடிவில் வட்டமாக இட்டு சப்பாத்திக்கல்லில் போட்டு வேக வைத்து எடுக்கவும்.
* சுவையான காலிபிளவர் சப்பாத்தி ரெடி.
|