நூடுல்ஸ் சாப்பிட்டவரின் பரிதாப நிலை…. பார்த்த பின்பு இனி தொட்டுக்கூட பார்க்க மாட்டீங்க!…

742

உலகிலேயே காரமான நூடுல்ஸை சாப்பிட்ட ஒருவர் சில நிமிடம் செவிடாகி போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனை சேர்ந்த பென் சுமடிவீரியா(22) என்பவர் இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் உள்ள உணவகத்திற்கு சென்றுள்ளார். அங்கு மிக காரமான நூடுல்ஸை சாப்பிட்டுள்ளார், இது சிவப்பு மிளகாயை விட பல மடங்கு காரம் வாய்ந்ததாகும்.

சாப்பிட ஆரம்பித்த உடனேயே பென்னுக்கு வியர்க்க ஆரம்பித்து ஒரு வித மயக்க நிலையை அடைந்தார். இரண்டு நிமிடம் அவர் காது கேட்காமல் செவிடாகி போனது. உடனடியாக தண்ணீர், வாழைப்பழம் சாப்பிட்டாலும் மயக்க நிலையிலிருந்து விடுபடமுடியாமல் தவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், இதுவரை வாழ்நாளில் நான் சாப்பிட்ட உணவிலேயே இது தான் காரமானது என்றும், என் உதடு எரிச்சலாகி என் உடம்பே சிறிது நேரம் திணறி விட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

 

SHARE