முதுகெலும்பு முறிவு காரணமாக உலக கோப்பை தொடரில் இருந்து விலகினார் நெய்மர்.
பிரேசிலில் உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதன் காலிறுதியில் பிரேசில் அணி, கொலம்பியாவை 2–1 என, வீழ்த்தியது. இந்த போட்டியின் 88வது நிமிடத்தில் பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் முதுகின் மீது, கொலம்பியாவின் ஜுனிகா, தனது வலது முழங்காலை வைத்து மோதினார்.
இதனால் காயமடைந்த நெய்மர், உடனடியாக களத்தில் இருந்து வெளியேறினார். இவரது முதுகெலும்பு உடைந்ததை அடுத்து, உலக கோப்பை தொடரில் இருந்து விலகினார்.
அரையிறுதியில் ஜெர்மனியை சந்திக்கவுள்ள நிலையில், இப்படி நடந்தது பிரேசில் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.