அமெரிக்காவில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தன்னுடைய கடைசி நிமிடம் என கூறி நண்பரிடம் ஆட்டம் போட்ட வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அமெரிக்காவின் டல்லாஸ் மகாணத்தைச் சேர்ந்தவர் Ana-Alecia(32). இவருக்கு மூன்று வயது குழந்தை உள்ளது. இவர் கடந்த டிசம்பர் மாதம் rhabdomyosarcoma என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதற்காக சிகிச்சை எடுப்பதற்காக டல்லாஸ் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த வாரம் ஒரு வீடியோவை தன்னுடைய இன்ஸ்டிராகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார். அதில் அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள நான் தன்னுடைய கடைசி நிமிட மகிழ்ச்சியையும் சிரிப்பையும் பதிவு செய்து கொள்கிறேன் என கூறி அவரும், அவருடைய நண்பரான Danielle Andrus என இருவரும் மருத்துவமனையின் உள்ளே juju என்ற பாட்டிற்கு ஆட்டம் போட்டுள்ளனர்.
மேலும் ஒருவடைய நோயை அழிப்பதற்கு அவருடைய தன்னம்பிக்கையும், மகிழ்ச்சியே மிகப்பெரிய மருந்து என கூறி சற்று கவலையுடன் கூறினார். இந்த வீடியோவைக் கண்ட பலரும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
Ana-Alecia புற்று நோயால் பாதிக்கப்பட்ட காரணத்தினால் அவருக்கு சிகிச்சை அளிப்பதற்கு அதிகமாக பணம் தேவைப்படும் என்பதால் பலரும் அவருக்கு உதவி செய்து வருகின்றனர்.
மேலும் அவர் கூறுகையில், புற்று நோய் ஒன்றும் மரணதண்டனை இல்லை எனவும்,அதிலிருந்து மீள்வது எப்படி என்பது குறித்து யோசித்து கொண்டிருப்பதாகவும், அதிலிருந்து விரைவில் மீண்டு வருவேன் என அவர் கூறியிருப்பது, பலருக்கும் ஒரு தூண்டுகோலாக அமைந்துள்ளது.
அவருக்கு இன்னும் சில தினங்களில் புற்றுநோய் தொடர்பான சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.