நேரில் அழைத்து பாராட்டிய கமல்.. தமிழ்நாட்டில் பட்டையை கிளப்பும் மஞ்சுமெல் பாய்ஸ் வசூல்

110

 

மலையாளத்தில் வெளிவந்து இன்று தென்னிந்திய சினிமாவை கலக்கிக்கொண்டிருக்கும் திரைப்படம் மஞ்சுமெல் பாய்ஸ். இப்படத்தை சிதம்பரம் என்பவர் இயக்கியிருந்தார்.

உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது. கேரளாவில் மட்டுமே இதுவரை ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் தன்னையும் தனது குணா படத்தையும் பெருமைப்படுத்திய படத்தின் மொத்த குழுவையும் அழைத்து பாராட்டினார் கமல் ஹாசன். அந்த வீடியோ கூட வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

தமிழக வசூல்
இந்நிலையில், கேரளாவில் மட்டுமின்றி தமிழகத்திலும் பட்டையை கிளப்பி வரும் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் இதுவரை தமிழ்நாட்டில் ரூ. 5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் இறுதி வசூலை.

SHARE